மார்ச் 26 ஆம் தேதி முதல் மார்ச் 28ஆம் தேதி வரை தொடர்ந்து 3 நாட்களுக்கு சென்னையில் தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் நடத்தும் பேக்கரி பொருட்கள் தயாரித்தல் பயிற்சியானது காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
பயிற்சியின் சிறப்பம்சங்கள் :-
✓ ஹைதராபாத் கராச்சி பிஸ்கட்
✓ ஜெர்ரா உப்பு பிஸ்கட்
✓ இனிப்பு குக்கீகள்
✓ ஈஸ்ட் புளிக்கவைக்கப்பட்ட பாம்பே பன்
✓ இனிப்பு ரொட்டி
✓ கிரீம் பன்
✓ பழ ரஸ்க்
✓ பப்ஸ் வகைகள்
✓ கேக் வகைகள் போன்றவற்றிற்கு கற்பித்தல் பயிற்சி
✓ பேக்கரி பொருட்களின் மூலப்பொருளை பெறுதல் மற்றும் அதற்கான பிராண்டுகளை தேர்வு செய்தல்
✓ கருவிகள் மற்றும் உபகரணங்களில் உள்ளீடுகள்
✓ இயந்திரங்களை பெறுவதற்கான வசதி
✓ தயாரிப்பு சந்தைப்படுத்துதலின் அம்சங்கள் பேக்கிங் லேபிளிங், விலை போன்றவற்றை முடிவு செய்வதற்கான வழிமுறைகள்
பயிற்சிகளோடு சேர்த்து பேக்கரி ஆரம்பிப்பதற்கான அனைத்து பொருட்களையும் பெறுவதற்கான வழிவகைகளையும் தொழில் முனைவோர் மேம்பாட்டு கழகம் தரப்பில் செய்து தரப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
விண்ணப்பிக்கும் முறை :-
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்றும் 18 வயது நிறைவடைந்து இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சியில் சேர நினைப்பவர்களுக்கு குறைந்த விலையில் வாடகைக்கு ஏசி ரூம் கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
www.editn.in என்று அதிகாரப்பூர்வ இணையதளத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம் என்றும் நேரடியாக விண்ணப்பிக்க நினைப்பவர்கள் நேரடியாக தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம். சிட்கோ தொழிற்பேட்டை இடிஐஐ அலுவலக சாலை ஈக்காட்டுத்தாங்கல், சென்னை 600 032. 8668108141/8668102600 முகவரியை அணுகி விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.