வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தான் அமைதிக்கான நோபல் பரிசுக்கு (Nobel Peace Prize) தகுதியானவர் என்றும், ஆனால் அரசியல் காரணங்களுக்காகத் தனக்கு அது மறுக்கப்படுவதாகவும் பரபரப்புக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
டிரம்ப்பின் “பஞ்ச்” வசனங்கள்:
ஏன் எனக்குத் தரவில்லை?: “உலகில் பல்வேறு மோதல்களைத் தடுத்து நிறுத்தி, லட்சக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றியவன் நான். உண்மையாகப் பார்த்தால் நான் எப்போதோ அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றிருக்க வேண்டும்.”
நார்வே மீது பாய்ச்சல்: “நார்வேவுக்கும் நோபல் பரிசுக்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்வதையெல்லாம் நம்பாதீர்கள். நோபல் குழு அந்த நாட்டில் தான் இருக்கிறது, அதை அந்த நாட்டு அரசு தான் முழுமையாகக் கட்டுப்படுத்துகிறது.”
மரியாதை போயிருச்சு: “நோபல் பரிசு விவகாரத்தில் நார்வே அரசு நடுநிலை தவறிவிட்டது. இதனால் அந்த நாட்டின் மீது நான் வைத்திருந்த மரியாதையை இழந்துவிட்டேன்” எனப் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.
பின்னணி என்ன? வழக்கமாக அமைதிக்கான நோபல் பரிசு நார்வே நாட்டு நாடாளுமன்றத்தால் நியமிக்கப்படும் ஐந்து பேர் கொண்ட குழுவால்தான் தீர்மானிக்கப்படுகிறது. ஆனால், டிரம்ப் அதைத் தனது அரசியல் எதிரியாகப் பார்ப்பதுடன், நார்வே நாட்டு அரசுக்கு எதிராகப் பேசுவது ஐரோப்பிய நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விமர்சனம்: டிரம்பின் இந்தப் பேச்சுக்கு நார்வே தரப்பில் இதுவரை பதில் வரவில்லை என்றாலும், சமூக வலைதளங்களில் “நோபல் பரிசு கேட்டு இப்படித் தான் அடம் பிடிப்பதா?” எனப் பலரும் நக்கல் செய்து வருகின்றனர்.





