அமெரிக்காவில் புதிய அதிபராக டொனால்ட் டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் முதல் பதவியேற்று இருந்தார். டொனால்ட் டிரம்ப் பதவியேற்புக்கு பின் உலக நாடுகள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு புதிய சட்டத்தை அமல்படுத்த உள்ளார் என தகவல்கள் வெளியாகின. புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டால் அமெரிக்காவில் வாழும் ஏறத்தாழ 45 லட்சம் இந்திய மக்களின் நிலை என்னவாகும் என்று தெரியவில்லை.
டொனால்டு டிரம்ப் முதலில் சட்டத்திற்கு புறம்பாக வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவில் வாழும் மக்களை வெளியேற செய்தார். அதாவது சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறிய வெளிநாட்டினர்களை அவர்களது சொந்த நாடுகளுக்கு கட்டாயப்படுத்தி நாடு கடத்தினார். அதன்படி தாமாக முன் வருபவர்களுக்கு ஆயிரம் டாலர்கள் என்ற சிறப்பு சலுகையும் அவர் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். இதற்கிடையே டொனால்ட் டிரம்ப் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தும் வகையில் ஒரு புதிய முயற்சியை கொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
கடந்த 22 ஆம் தேதி ஒன் பிக் பியூட்டிஃபுல் பில் என்று சட்டத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நிறைவேற்றினார். இந்த ஒன் பிக் பியூட்டிஃபுல் பில் என்ற சட்டத்தின் முக்கிய அம்சமாக,அமெரிக்க குடிமக்கள் அல்லாதவர்கள் வெளிநாடுகளுக்கு பணப் பரிமாற்றங்களுக்கு ஐந்து சதவீத வரி வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது எச் ஒன் பி விசா வைத்திருப்பவர்கள் மற்றும் கிரீன் கார்டு வைத்திருப்பவர்கள் அமெரிக்காவிலிருந்து சொந்த நாடுகளுக்கு பணம் அனுப்பும் பொழுது அந்த பணம் மாற்றங்களுக்கு ஐந்து சதவீதம் வரி வசூலிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தச் சட்டம் இயற்றப்பட்டால் அமெரிக்காவில் வாழும் அமெரிக்க வாழ் இந்தியர்கள் 45 லட்சம் பேரும் இந்த ஒன் பிக் பியூட்டிஃபுல் பில் சிறப்பு மசோதா பெரிதாக பாதிக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் உலக நாடுகளை பயமுறுத்தும் வகையில் இந்த ஒன் பிக் பியூட்டிஃபுல் பில் மசோதாவை அமல்படுத்த முயற்சித்து வருகிறார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.