திமுக ஆட்சிக்கு வந்த பெண்களுக்கு மகளிர் உரிமை தொகை திட்டத்தை கொண்டு வந்தது இதன் மூலம் கிட்டத்தட்ட இரண்டு கோடிக்கும் மேற்பட்டோர் பயனடைந்து வருகின்றனர் ஆனால் பலருக்கும் இத்திட்டத்தின் மீது அதிருப்தி உள்ளது. ஓட்டு கேட்கும் பொழுது எந்த ஒரு வரைமுறையும் இன்றி பெண்களுக்கு ஆயிரம் வழங்கப்படும் என்று கூறியவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு பலதரப்பட்ட வரைமுறைகளை கொண்டு வந்தனர். இதனால் பல பெண்களுக்கு இத்திட்டம் பொருந்தாது போனது.
இப்படி இருக்கையில் சில கட்டுப்பாடுகளை தளர்த்தி திட்டத்தின் மூலம் கூடுதலாக பயனாளிகளை சேர்த்தனர். தற்சமயம் துணை முதல்வர் மீண்டும் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில், கார்ப்பரேஷன் தொழிலாளர்களின் மனைவிகள் அரசு வேலையில் இருக்கும் மனைவிகள் உள்ளிட்ட அனைவருக்கும் செல்லுபடி ஆகும் எனக் கூறியுள்ளார். அதன்படி வரும் மூன்று மாதத்திற்குள் இதன் அடிப்படையில் வரும் அனைத்து மகளிர்க்கும் தலா ஆயிரம் மாதம் தோறும் வழங்குவது குறித்து விண்ணப்பங்கள் கொடுக்கப்படும்.
மேற்கொண்டு இந்த திட்டம் யாருக்கெல்லாம் செயல்படாது என்றும் தெரிவித்துள்ளனர்.
ஒரே வீட்டில் இரண்டு பெண்கள் இருந்து ஒருவர் மட்டும் தனித்து ரேஷன் அட்டை இதற்கென்று பெற நினைத்தால் அவர்களுக்கு இந்த பணம் கிடைக்காது.
வேறேதும் திட்டத்தின் மூலம் அரசு நிதி உதவி பெற்று வந்தாலும் இத்திட்டம் செல்லுபடி ஆகாது என்ன தெரிவித்துள்ளனர்.
அதேபோல பென்ஷன் பெறுபவர்கள் இத்திட்டம் பெறலாம் என்பது குறித்து எந்த அறிவிப்பும் தற்போது வரை வெளிவரவில்லை. நாளடைவில் அவர்களுக்கும் வழங்கப்பட வாய்ப்புள்ளது எனக் கூறுகின்றனர்.