ஈ சாலா கப் நமதே என்று சொல்லாதீர்கள்.. விராட் கோலி பளீர்!! டிவில்லியர்ஸ் கூறியது என்ன??

Don't say, "Oh, this is our cup

கிரிக்கெட்: ஆர் சி பி மிக முக்கிய வீரரான விராட் கோலி சாலா கப் நந்தி என்று கூற வேண்டாம் என்று கூறியுள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய அணியின் கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் இந்திய அணியாக ஒரு போட்டியில் விளையாடும் போது அனைத்து வீரர்களுக்கும் சரியான மரியாதை கொடுத்து மற்றும் அனைத்து வீரர்களுக்கும் ரசிகராக மாறிவிடுகின்றன ஆனால் அதுவே ஐபிஎல் போட்டி என்று வந்துவிட்டால் ஒருவருக்கொருவர் எதிரியாக மாறி விடுகின்றனர்.

உதாரணத்திற்கு விராட் கோலி தற்போது நடைபெறும் இன்டர்நேஷனல் போட்டிகளில் விராட் கோலி ஒரு தலை சிறந்த கதாநாயகனாக பார்க்கப்படுகிறார். அதுவே ஐபிஎல் போட்டி என்று வந்து விட்டால் பெங்களூரு அணி ரசிகர்களை தாண்டி மற்ற ரசிகர்கள் அனைவரும் அவரை எதிரியாக பார்க்கின்றனர். அவர் போட்டியின் போது வெளிப்படுத்தும் உடல் மொழி வெளிப்பாடுகளை மற்ற ரசிகர்கள் வெறுக்கின்றனர்.

இதுவரை நடைபெற்ற ஐபிஎல் தொடர்களில் அதிக ரசிகர் பட்டாளம் கொண்ட அணிகளில் முதல் மூன்று அணிகளில் ஆர் சி பி அணி நிச்சயம் இருக்கும் அப்படி இருக்கும் நிலையில் இன்னும் ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வெல்ல முடியாமல் தவிக்கிறது. மேலும் விராட் கோலி இ சாலா கப் நமதே என்ற வசனத்தை பயன்படுத்தியது பரவலாக பரவி பெங்களூரு அணியை கிண்டல் செய்யும் ஒரு வசனமாக மாறிவிட்டது.

தற்போது இதுகுறித்து டி வில்லியர்ஸ் கூறுகையில் நான் ஈ சாலா கப் நமதே என்று கூறினேன். அதற்கு விராட் கோலி அதை யாரும் சொல்ல வேண்டாம். இந்த முறை அதை சொல்லாமல் நாம் கோப்பையை வெல்வோம் இந்த ஆண்டு கோப்பை நமக்குத் தான் என்று கூறினார் என்று கூறியுள்ளார் டி வில்லியர்ஸ்.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram