தேனி மாவட்டத்தை சேர்ந்த மருத்துவ பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டார் சுதர்சன். டெக் சூப்பர் ஸ்டார் என்ற youtube சேனல் நடத்தி வந்த பிரபல சுதர்சன் மீது வரதட்சணை கொடுமை வழக்கு தொடர்ந்துள்ளார் அவரது மனைவி. திருமணத்தின் போது 30 பவுன் நகை போட்டதாக கூறப்படுகிறது.
மேலும் 5 லட்சம் ரொக்கமாகவும் கொடுக்கப்பட்டுள்ளது. வீடு கட்டுவதற்காக மேலும் 10 லட்சம் ரூபாய் வரதட்சணையாக வழங்க வேண்டும் என கொலை மிரட்டல் விடுத்ததாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. செல்போன் லேப்டாப் ஹெட்செட் போன்ற எலக்ட்ரானிக் பொருட்களை பற்றி youtube இல் விமர்சனங்கள் செய்து வருவது இவரது சேனலில் வெளியாகும் தகவல்கள்.
Youtube சேனலில் போதுமான பணம் கிடைக்காததால் வீடு கட்டும் நிலை பாதியில் நின்றுள்ளது. இதற்காக மனைவி 5 லட்சம் பணம் கொடுக்க தயாராக இருந்த நிலையில் மேலும் 10 லட்சம் கேட்டு சுதர்சன் குடும்பத்தினர் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். மனைவி கர்ப்பிணியாக இருந்த பதிலும் குழந்தையுடன் வீட்டை விட்டு அடித்து விரட்டி உள்ளனர்.
மேலும், மனைவி அளித்த புகாரின் பேரில் சுதர்சன், அவரது பெற்றோர்கள் மாலதி மற்றும் சுந்தர்ராஜன் உள்ளிட்ட ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். மனைவியை வரதட்சணை கொடுமை படுத்தியதால் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை வழக்கு செய்ததால் தலைமறைவாக உள்ளார் சுதர்சன். ஆரம்பத்தில் 10 லட்சம் கேட்டதாக தெரிய வந்த பின் கொலை மிரட்டல் ஆக மாறியுள்ளது.
மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் மருத்துவராக இருந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டு கர்ப்பிணியாக இருந்த மனைவியை வரதட்சணை கொடுமை படுத்தியதால் வழக்கு பதிவு செய்யப்பட்டதன் காரணமாக தலைமறைவாக உள்ளார் சுதர்சன். போலீசார் வழக்கு பதிவு செய்து சுதர்சனை போலீசார் தேடி வருகின்றனர்.