கன்னியாகுமரி: ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வரதட்சணை கொடுத்தும் கணவர் விட்டார் மேலும் பணம் கேட்டு வரதட்சணை கொடுமைப்படுத்தியதால் தற்கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு திருப்பூர் மாவட்டம் அவிநாசி பகுதியைச் சேர்ந்த ரிதன்யா வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்டார்.
மேலும், உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பல கொடுமைகளை சந்தித்து விட்டேன் என்றும் யாரிடமும் நீங்கள் தலை குனிய வேண்டாம் என்று ஆடியோ மெசேஜை தனது பெற்றோர்களுக்கு அனுப்பி விட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ரிதன்யாவை தொடர்ந்து கன்னியாகுமரியிலும் வரதட்சணை கொடுமையால் மற்றொரு தற்கொலை சம்பவம் அரங்கேறி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த கருங்கல் அடுத்த பகுதி திக்கணங்கோடு செம்பிலாவிலை பகுதியை சேர்ந்த ராபின்சன் மகள் ஜெபிலாமேரி. தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்துள்ளார். நிதின் ராஜ் என்பவரை 10 வருடங்களாக காதலித்துள்ளார். இருவரின் காதல் வீட்டாருக்கு தெரிய வந்ததை தொடர்ந்து பெற்றோரின் சம்மதத்துடன் ஜனவரி மாதம் திருமணம் நடைபெற்றது.
திருமணத்தின் போது 50 பவுன் நகை மற்றும் 50 லட்சம் செலவில் புதிய வீடு ஆகியவற்றை சீதனமாக கொடுத்துள்ளனர். திருமணத்திற்குப் பின்பு நிதின்ராஜ் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். திருமணமான கையோடு ஜெபிலா மேரியின் நகைகளை கணவர் வீட்டார் அடகு வைத்துள்ளனர் . திருப்பி கேட்டபோது துன்புறுத்தி உள்ளனர். இந்நிலையில் மன அழுத்தத்தில் இருந்த ஜெபிலா வீட்டில் நேற்று மதியம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
வெளியே சென்ற கணவன் வீடு வந்து பார்த்த பொழுது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதை பார்த்து உடலை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். பரிசோதித்த மருத்துவர்கள் சிகிச்சை பலனின்றி ஜெபிலா மேரி இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். போலீசில் தகவல் அளிக்கப்பட்ட பின் ஆசாரிபள்ளம் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
தகவல் அறிந்து வந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக புகார் அளித்தார். முதற்கட்ட விசாரணையில் வரதட்சணையாக 5 லட்சம் கேட்டு அடித்து கொடுமைப்படுத்தியது தெரிய வந்தது. மேலும், தாயாரிடம் பணத்தை தருமாறு ஜெபிலா கேட்டு உள்ளார்.
மகள் இறந்ததை கூட கிண்டலாக எங்களிடம் தெரிவித்தார். மகள் கழுத்தில் கயிறு இறுக்கிய தடம் இருந்தது எனவே மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறினார். இது தொடர்பாக 100க்கும் அதிகமானோர் போராட்டத்தில் இறங்கினர். மரணம் குறித்து ஏடிஎஸ்பி தலைமையில் விசாரணை நடந்து வருகிறது.