Cinema : மோகன்ஜி இயக்கத்தில் திரௌபதி 2 திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை தனது x பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
திரௌபதி எனும் திரைப்படம் 2020 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம். இந்தத் திரைப்படத்தை மோகன் ஜி அவர்கள் இயக்கியிருந்தார். மோகன் ஜி இந்த திரைப்படத்திற்கு முன் பழைய வண்ணாரப்பேட்டை என்னும் திரைப்படத்தை எழுதி தயாரித்து வெளியிட்டு இருந்தார். அதன்பின் திரௌபதி திரைப்படத்தினை 2020 ஆம் ஆண்டு இயக்கி வெளியிட்டார்.
இந்த திரௌபதி திரைப்படத்தின் கதாநாயகன் பாத்திரத்தில் ரிச்சர்ட் ரிஷி நடித்திருந்தார், கதாநாயகியாக ஷீலா ராஜ்குமார் நடித்திருந்தார், மேலும் சௌந்தர்யா பிரியா, அஸ்மிதா ,காயத்ரி ,ஜீவா ரவி , கருணாஸ் காயத்ரி லொள்ளு சபா சேஷு என பல முன்னணி நடிகர்கள் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தனர். 2020 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. சொல்லப்போனால் இந்த திரைப்படத்திற்கு பின் தான் இந்த இயக்குனர் யார் என்று அறியும் அளவிற்கு திரைப்படம் வரவேற்பை பெற்றது.
தற்போது இந்த திரைப்படத்தின் இரண்டாவது பாகம் திரௌபதி 2 திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் மோகன் ஜி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார், அந்தப் பதிவில் அவன் அருளாலே அவள் தாள் வணங்கி காக்க உயிரை துச்சம் என துறந்த மாவீரர்களின் மறைக்கப்பட்ட வீர தீர ரத்த சரித்திரம் இந்த ஆண்டு இறுதியில் ரிச்சர்ட் ரிஷி அவர்களின் நடிப்பில் ஜிப்ரான் இசையில் திரையில் மிரட்ட வருகிறாள் திரௌபதி 2 என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் அந்த திரைப்படத்தின் இயக்குனர் மோகன் ஜி. தற்போது ரசிகர்களிடையே மீண்டும் எதிர்பார்ப்பை தூண்டி உள்ளது இந்த திரைப்படம்.