New Zealand : இன்று காலை நியூசிலாந்தில் மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இது நியூசிலாந்தில் உள்ள தெற்குப் பகுதியின் தீவுக்கடலில் ஏற்பட்டது.
நியூசிலாந்தில் உள்ள கீழ்தெற்கு தீவில் இன்று காலை 6 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தத் தீவின் கடலுக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலநடுக்கம் ரெக்டர் அளவுகோலில் சுமார் 6.8 ஆக பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதனைக் கண்டு மக்கள் மிகவும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
ஆனால் இந்த நியூசிலாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் என்பது முதலில் லிட்டர் அளவுகோலில் இயலாக இருந்தது என கூறப்பட்ட நிலையில் அவசரநிலை மேலாண்மை நிறுவனமானது. அதனை மறுத்து மீண்டும் ஆராய்ந்து பார்த்தபோது 6.8 ஆக பதிவாகி இருந்தது. சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படாத நிலையில் அங்குள்ள மக்கள் அந்த நிலநடுக்கத்தினை உணர்ந்தனர். அது மட்டுமல்லாமல் திடீரென அங்குள்ள வீடுகள் வீட்டில் உள்ள பொருட்கள் என அனைத்தும் குலுங்கியதாக கூறப்படுகிறது.
இதனால் உடனடியாக வீட்டில் உள்ள இருந்து மக்கள் வீட்டை விட்டு வெளியேறி கத்தி கூச்சலிட்டதாக கூறுகின்றனர். இந்த நிலநடுக்கத்தால் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகி உள்ளது இது மட்டுமல்லாமல் நியூசிலாந்தின் தெர்மோடைக் தீவில் கடந்த ஆண்டு 7.2 ரிக்டர் அளவு நிலநடுக்கம் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.