Edapadi:தமிழக பட்ஜெட் குறித்து தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கூறியது. தமிழக பட்ஜெட் முழுவதும் கடன் வாங்கிய ஏன் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்று விமர்சித்துள்ளார்
மேலும் பெட்ரோல் டீசல் விலை குறைப்பு குறித்து எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் வெளியாகவில்லை இது முற்றிலும் தமிழக மக்களை ஏமாற்றுவதற்கான பட்ஜெட் என்று கூறியுள்ளார். தமிழக முதல்வர் விளம்பரத்தை மட்டுமே முன்னிலைப்படுத்தி ஆட்சி நடத்திக் கொண்டு வருகிறார்.
இந்த பட்ஜெட் அறிவிப்புகள் வரும் 2026 தேர்தலில் வாக்குகளை பெறவே இந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ள. புதிய பேருந்துகள் வாங்க ரூபாய் 3 ஆயிரம் கோடி என்பது வெற்று அறிவிப்பு. கடந்த நான்கு ஆண்டுகளில் 50 ஆயிரம் அரசு பணியிடங்கள் நிரப்பப்பட்டன. இன்றைய பட்ஜெட் அறிக்கையில் ஓராண்டில் 40 ஆயிரம் அரசு பணியிடங்களை எப்படி நிரப்ப முடியும் இது தேர்தலுக்கான கண்துடைப்பு பட்ஜெட் என்று கூறியுள்ளார். ஆட்சிக்கு வந்ததும் பெட்ரோல் 3 ரூபாய் குறைக்கப்பட்டது டீசல் விலை குறைக்கப்படவில்லை.
மேலும் டீசல் விலை ஏன் குறைக்கப்படவில்லை என்ன ஆச்சு என்று கேள்வி எழுப்பினார். மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்தும் முறை குறித்து பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் அறிவிக்கப்படவில்லை. மாதந்தோறும் ஒரு கிலோ சர்க்கரை கூடுதலாக வழங்கப்படும் என்ற வாக்குறுதி என்ன ஆயிற்று என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.
மேலும் மதுவிலக்கு துறையில் ஆயிரம் கோடி ஊழல் நடந்திருப்பது அமலாக்க துறையின் ரைடில் தெரியும் வந்துள்ளது. மேலும் இதில் 3ஆயிரம் கோடிக்கு மேல் ஊழல் நடந்துள்ளது என்று கூறுகின்றனர். தமிழகத்தில் சட்டமன்ற கூட்ட பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பட்ஜெட்டை புறக்கணித்து வெளிநடப்பு செய்தார்.