தென் அமெரிக்காவில் உள்ள கடலோர பகுதியில் அமைந்துள்ள நாடு சூரினாம் ஆகும். தென் அமெரிக்காவில் டச்சுக்காரர்கள் ஆட்சி அதிகாரத்தின் கீழ் இருந்த சூரினாம் 1975 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்று சுதந்திர நாடானது. குறிப்பாக தமிழ்நாடு மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட இந்தியாவின் மாநிலங்களில் இருந்து பலரை தோட்ட வேலைக்காக அடிமைகளாக கடத்திச் சென்றுள்ளனர்.
கடத்தப்பட்டவர்கள் அங்கேயே தற்போது குடியேறி வசித்து வருகின்றனர். இந்நிலையில் நாட்டின் அதிபராக இருந்த சான் சந்தோகி பதவி வகித்தார். தற்போது அவரது பதவி காலம் முடிவடைய உள்ளது. சாம் சந்தோகியின் பதவி காலம் முடிவடைந்த நிலையில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடத்தப்பட்டது.
அதிபரை தேர்ந்தெடுக்கும் தேர்தலில் டாக்டர் ஜெனிஃபர் கிர்லிங்க்ஸ் சிமோன்ஸ் போட்டியிட்டு பெரும்பான்மை வாக்குகளை பெற்றார். ஜெனிபர் கிர்லிங்க்ஸ் 71 வயது உடைய பெண் ஆவர். மேலும் டாக்டரான இவர் அதிபர் தேர்தலில் போட்டியிட்டார். தேர்தலில் பெரும்பான்மையான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று அதிபர் பதவிக்கு தேர்வானார்.
வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தென் அமெரிக்காவில் முதல் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வருகின்ற 19ஆம் தேதி பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. பதவி ஏற்பு விழாவில் ஜெனிபர் கிர்லிங்க்ஸ் சிமோன்ஸ் அதிபராக பதவியேற்க உள்ளார்.