தமிழகத்தில் இருக்கக்கூடிய பல்வேறு சிறுபான்மை பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களை பணிக்கு நியமனம் செய்வது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆசிரியர்கள் நியமனம் செய்யும் பொழுது பட்டம் மற்றும் பி எட் படித்திருந்தால் தேர்ச்சி என்ற நிலை இருந்ததை தொடர்ந்து தற்பொழுது கட்டாயமாக ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும் என ஹை கோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டிருக்கிறது.
இனி தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து சிறுபான்மை பள்ளிகளிலும் மாணவர்களுக்கான சிறந்த ஆசிரியர்களை தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் ஆசிரியர்கள் கட்டாயமாக TET தகுதி தேர்வு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவானது சிறுபான்மை பள்ளிகளுக்கு மட்டுமல்லாது தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும் என மதுரை உயர்நீதிமன்ற கிளை தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இனி பள்ளிகளில் ஆசிரியராக பணிபுரிய நினைக்கும் அனைவரும் கட்டாயமாக TET தகுதி தேர்வினை எழுதி தேர்ச்சி பெற்ற பின்னரே ஆசிரியர்களாக பணிபுரிய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இனி கல்வி நிறுவனங்களால் பணிபுரியக்கூடிய ஆசிரியர்களின் குறைந்தபட்ச கல்வி தகுதியை நிர்ணயிக்க வேண்டிய உரிமை தமிழக அரசின் உடையது என்றும் மதுரை கிளை நீதிபதிகள் தெரிவித்து இருக்கின்றனர்.