அமெரிக்க அரசியலில் புதிய கட்சியை தொடங்கப் போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ட்ரம்ப் கொண்டுவந்த “ஒன் பிக் பியூட்டிஃபுல் பில்” என்று திட்டத்தை எதிர்த்து அரசியல்வாதிகளை அளிக்கப் போகிறேன் என எலான் மஸ்க் கூறி வருகிறார்.
டெஸ்லா நிறுவனர் மற்றும் உலக பெரும் பணக்காரரான எலான் மஸ்க் , டொனால்ட் ட்ரம்புக்கு எதிராக புதிய கட்சி தொடங்க போவதாக அறிவித்திருந்தார். டொனால்ட் ட்ரம்ப் முன்மொழிந்துள்ள “ஒன் வீக் பியூட்டிஃபுல் பில்” என்ற திட்டத்தை கடுமையாக விமர்சித்து புதிய கட்சியை தொடங்குவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த திட்டமானது அமெரிக்க அரசின் கடனை அதிகரிக்கும். மேலும், கடனை ட்ரில்லியன் டாலர் அளவில் நிதி ஒதுக்கீடு செய்யும் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிய நிலையில் பலரும் எதிர்த்து வருகின்றன. வரி விலக்கு திட்டங்கள் தொழில்நுட்ப முதலீடுகள் மற்றும் சமூக நல உதவிகள் என பல அம்சங்கள் கொண்ட மசோதாவை விளக்கினார் டிரம்ப்.
மசோதாவுக்கு வாக்களிக்கும் எந்த அரசியல் தலைவர் அல்லது நாடாளுமன்ற உறுப்பினரும் கட்சியின் முன்னிலையில் தேர்தலில் தோல்வியடைவார் என்றும், நான் கடைசியாக உயிர் வாழும் வரை அவர்கள் அவர்களை வீழ்த்த பணிபுரிவேன் என்றும் தனது சமூக வலைத்தளத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளார் எலான் மஸ்க்.
இந்த திட்டத்திற்காக அமெரிக்க காங்கிரஸ் வாக்கெடுப்பு நடத்தியதில் ட்ரம்ப் ஆதரவாளராக வாக்களிக்க சாத்தியம் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. “அமெரிக்காவை கடனாளியாக்க வேண்டாம்” என்ற நோக்கத்தோடு புதிய அரசியல் கட்சியை தொடங்கப் போவதாக எலான் மாஸ்க் கூறியுள்ளார்.
அதன்படி கட்சியின் பெயர் “அமெரிக்கா பார்டி” என பெயர் வைத்துள்ளார். அமெரிக்க நாடாளுமன்றத்தில் டொனால்ட் டிரம்ப் கண்டு வந்த “ஒன் பிக் பியூட்டிஃபுல் பில்” மசோதா நிறைவேற்றப்பட்டால் புதிய கட்சியை உடனடியாக தொடங்குவேன் என எலான் மஸ்க் எச்சரித்துள்ளார். அண்மையில் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மோதல் வெடித்துள்ளது. தொடர்ந்து எலான் மஸ்க் வகித்திருந்த பதவியை ராஜினாமா செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.