அமெரிக்க அதிபர் பிரதமராக பதவி ஏற்றதிலிருந்து உலக நாடுகளை அச்சுறுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அண்மையில் உலகப் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் மற்றும் அதிபர் ட்ரம்புக்கும் இடையே கடுமையான மோதல் நிலவி வந்த நிலையில் மீண்டும் மோதல் வெடித்துள்ளது. இந்நிலையில் எலான் மாஸ்க் கூறியதாவது அமெரிக்க அதிபர் ஒரு முட்டாள் என்றும் அவரது செயல்பாடுகள் அமெரிக்கர்களை அழிவை சந்திக்கும் என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் மீதான எதிர்ப்பு மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார் ஸ்பேஸ் நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க். டிரம்ப் கொண்டு வந்துள்ள ஒன் பிக் பியூட்டிஃபுல் பில் என்ற திட்டத்தை வைத்து கடுமையாக விமர்சித்துள்ளார். தனது எதிர்கால தேர்தல் பிரச்சாரங்கள் மற்றும் அமெரிக்க உற்பத்தியை காக்க மற்றும் வேலைவாய்ப்பு ஏற்படுத்த போன்ற நோக்கங்களில் ஒன் வீக் பியூட்டிஃபுல் என்ற திட்டத்தை கொண்டு வந்ததாக அறிவித்திருந்தார் ட்ரம்ப்.
இதன் மூலம் வெளிநாட்டில் இருந்து வரும் தயாரிப்புகள் மீது 10% வரி விதிக்க முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த திட்டமானது அமெரிக்க தொழில்கள் மற்றும் நுகர்வோர்களுக்கு கேடு விளைவிக்கும் என்று எலான் மாஸ்க் கடுமையாக சாடியுள்ளார். “ஒன் வீக் பியூட்டிஃபுல் பில்” என்ற திட்டமானது பைத்தியக்காரத்தனமாக உள்ளது. இது அமெரிக்க வேலையையும் பொருளாதாரத்தையும் அடியோடு அழிக்கும் எனது என்று தனது சமூக வலைதள எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் கூறுகையில் வெளிநாட்டில் இருந்து உள்ளீடுகள் மற்றும் பாகங்கள் தயாரிப்பு செய்யும் அமெரிக்கா உற்பத்தியாளர்கள் முதலில் பாதிக்கப்படுவார்கள் என்றும் எச்சரித்துள்ளார். இதன் மூலம் செலவுகள் அதிகரிக்கும் மற்றும் விலை உயர்ந்து இறுதியில் நுகர்வோரை கடுமையாக பாதிக்கும் என்று கூறியுள்ளார்.
இந்த திட்டமானது அமெரிக்காவில் உற்பத்தியை ஊக்குவிக்கும் என்று பதில் அளிக்கப்பட்டாலும் செலவுகள் குறையாமல் அதிகரித்துக் கொண்டே செல்லும் என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளது என்று வெளிப்படையாகவும் நேரடியாகவும் எல்லாம் பேசியுள்ளார். அமெரிக்காவை வலிமையாக்கும் என கூறிக்கொண்டு செலவுகள் மற்றும் பாக உற்பத்தி நெருக்கடிகளால் நுகர்வோர்களின் செலவுகளை முடக்கிவிடும் என்று சுட்டிக்காட்டி உள்ளார்.