100 மீட்டருக்கு அப்பால் தூக்கி எறியப்பட்ட ஊழியர்கள்!! 11 வண்டிகளில் களம் இறங்கிய தீயணைப்பு குழு!!

தெலுங்கானா மாநிலத்தில் செங்கா பட்டி என்கின்ற மாவட்டத்தில் உள்ள பசாமிலராம் என்ற ஊரில் சிகாச்சி என்கின்ற கெமிக்கல் ஃபேக்டரி ஒன்று உள்ளது. அதில் இன்று காலை வழக்கம் போல் வேலை தொடங்கப்பட்டு நடைபெற்று வந்திருக்கிறது. திடீரென்று எதிர்பாராத விதமாக பலத்த சத்தத்துடன் பாய்லர் வெடித்து சிதறி உள்ளது. இதில் 100 மீட்டருக்கு அப்பால் அங்கு வேலை பார்த்து வந்த ஊழியர்கள் தூக்கி வீசப்பட்டுள்ளனர். இந்த பாய்லர் வெடிப்பால் அங்கு கட்டிடங்களும் உடைந்து விழுந்து உள்ளன.

இதில் பத்துக்கும் மேற்பட்டோர் தற்போது வரை உடல் கருகிய நிலையில் இறந்து விட்டதாகவும், பலர் இடிபாடுகளில் சிக்குண்டு கூச்சலிட்டு வருவதாகவும் சம்பவ இடத்திலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. செய்தியறிந்து 11 வண்டிகளின் மூலம் தீயணைப்பு குழு அந்த இடத்திற்கு விரைந்துள்ளது. முதலில் புகை மூலம் தீயை அணைக்கப்பட்டு கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. ஒரு குழு கட்டிடத்தில் இடர் பட்டவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பலர் மிக மோசமான நிலையில் சிகிச்சைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். சிலருக்கு நல்ல காயங்களும் ஏற்பட்டு உள்ளது. அந்த ஃபேக்டரியின் பெரும்பான்மை வாய்ந்த பொருட்களும் உடைத்தெறியப்பட்டுள்ளது. இது அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், தீயணைப்பு வீரர்களுக்கு பெரிய சவால்களையும் ஏற்படுத்தி உள்ளது. மேலும் பலரின் நிலைமை கவலைக்கிடமாகவும் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உடல் தூக்கி எறியப்பட்டவர்களின் அடையாளத்தை சேகரித்து வருகின்றது தடயவியல் குழு. மேலும் சேதங்கள் குறித்து முழுமையாக மீட்ட பிறகு தான் அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share it :
Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram