சமூக நலத்துறையில் உதவி பணியாளர் நியமனத்தில் வேலைவாய்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதிலும் பன்னிரண்டாம் வகுப்பு படித்து இருந்தாலே போதும் இந்த வேலைக்கு அப்ளை செய்யலாம். வேலூர் மாவட்டத்தின் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் நடக்கும் இளைஞர் குழுமத்திற்கு உதவியாளர் உடன் கூடிய கணினி இயக்குவதற்காக இது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு குறைந்த அளவே ஆட்கள் தேவை என்பதால் தற்காலிகமாக செயல்பட்டு உள்ளது. முன் அனுபவம் வாய்ந்தவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பத்திற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி பிப்ரவரி 28. இதற்கு தகுதியாக ஏதேனும் ஒரு டிப்ளமோ கம்ப்யூட்டர் சான்றிதழ் பெறுமாறு படித்து இருத்தல் வேண்டும். தட்டச்சு பணியில் ஏற்கனவே பணியில் உள்ளவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். ஜனவரி 1, 2025 அன்று படி 18 வயது முதல் 42 வயதிற்குள் விண்ணப்பதாரரின் வயது இருக்க வேண்டும். சம்பளம் ரூ. 11000 என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நேர்முகத் தேர்வு அடிப்படையில் பணியிடம் நிரப்பப்படும். https://vellore.nic.in/notice_category/recruitment/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பம் பெறலாம். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, சுற்றுலா மாளிகை எதிரில் அண்ணா சாலை, வேலூர் – 632001 என்ற முகவரிக்கு விண்ணப்பத்தை ஃபில் பண்ணி அனுப்ப வேண்டும். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள். குறைந்த அவகாசமே உள்ளது என்பதால் முன் வருபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தகவல் வெளியிடப்பட்டுள்ளது.