வெஸ்ட் இண்டீஸ் அணியை ஓடவிட்ட இங்கிலாந்து!! இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர்!!

England chase down West Indies

வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒரு நாள் போட்டி தொடர் மற்றும் 3 டி20 தொடர்களில் விளையாடி வந்த நிலையில் நேற்று கடைசி டி20 போட்டியில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது இங்கிலாந்து அணி. இதில் முதலில் மூன்று ஒரு நாள் போட்டி தொடர் நடைபெற்ற நிலையில் மூன்று போட்டியிலும் இங்கிலாந்து அணி அபார வெற்றி பதிவு செய்து ஓடியை தொடரில் ஒயிட்வாஷ் செய்தது இங்கிலாந்து அணி.

 

அதனைத் தொடர்ந்து டி20 போட்டிகளில் முதல் 2 போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில் நேற்று தொடங்கிய போட்டியில் முதலில் தாஸ் என்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பவுலிங் செய்ய முடிவு செய்தது. தொடக்க வீரர்களாக களமிறிங்க இங்கிலாந்தின் ஜேமி ஸ்மித் மற்றும் டக்கெட் இருவரும் அபாரமாக விளையாடி அணிக்கு வெகுவாக ரன் சேர்த்தனர். 26 பந்துகளில் 60 ரன்கள் அடிக்க 46 பந்துகள் 84 ரன்கள் குவித்தார் இதனால் 20 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணியின் எண்ணிக்கை 248 என இமாலய இலக்கை நிர்ணயித்தது.

 

தொடர்ந்து கலக்குறீங்க வெஸ்ட் இண்டீஸ் அணி தொடக்க வீரர்கள் குறைவான ரண்களில் ஆட்டம் இழக்க கேப்டன் சாய் ஹோப் 45 ரன்கள் எடுத்தார். அடுத்தடுத்து வீரர்கள் ஆட்டம் இழக்க ரோமன் பவல் கடைசி வரை ஆட்டம் இழக்காமல் 79 ரன்கள் அடித்தார். எனினும் 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 211 ரன்கள் மட்டுமே எடுத்தது வெஸ்ட் இண்டீஸ் அணி இதன் மூலம் ஒரு நாள் போட்டி தொடர் மற்றும் டி20 தொடர்களிலும் அனைத்துப் போட்டியின் தோல்வியடைந்து படுதோல்வியை சந்தித்துள்ளது வெஸ்ட் இண்டீஸ் அணி.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram