இந்தியாவுக்கு எதிராக வரலாறு படைத்த இங்கிலாந்து!! 77 ஆண்டுகளில் இதுவே முதல் முறை!! 

England create history against India

இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் மோதும் நான்காவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடைபெறுகிறது. முதலில் பேட்டிங் செய்தது இந்திய அணி. முதல் இன்னிங்ஸில் 358 ரன்களை குவித்தது. பிறகு களமிறங்கிய இங்கிலாந்து அணி 544 க்கு 7 என்ற நிலையில் 156 ரன்கள் பெற்று முன்னிலையில் இருக்கிறது.
இங்கிலாந்து அணி ஏற்கனவே 2–1 என்ற தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றும் நோக்கில் விளையாடி வருகிறது இங்கிலாந்து அணி. இந்தியாவுக்கு எதிரான முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணியின் டாப் வீரர்கள் 70 ரன்கள் அடித்தனர்.
ஜோ ரூட் 150 ரன்கள் அடித்து அசத்தினார். பென் டக்கெட் 94 ரன்கள் எடுத்தார். ஜாக் கிராவ்லி மற்றும் ஒல்லி போப் முறையே 84 ரன்கள், 71 ரன்கள் அடித்து ரன்களை குவித்தனர்.
77 ஆண்டுகளில் டாப் ஆர்டர் வீரர்கள் 4 பேர் 70 ரன்களுக்கு மேல் அடித்திருப்பது இதுவே முதல் முறையாக கருதப்படுகிறது. 4 வது டெஸ்ட் போட்டியில் 3–1 என்ற தொடரை வெல்லுமா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. டாப் ஆர்டர் 4 பேட்ஸ்மேன்கள் 70க்கும் ரன்கள் எடுத்து இந்தியாவிற்கு எதிராக சாதனை படைத்தது 77 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாக பார்க்கப்படுகிறது.
5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி முன்னிலை பெற்றுள்ளது. இந்தியாவிற்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் 150 ரன்கள் அடித்து உலக சாதனையை நெருங்குகிறார் ஜோ ரூட் என புகழ்ந்து வருகிறார்கள் ரசிகர்கள்.
Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram