அதிமுக முன்னாள் அமைச்சர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உளளது. இது பற்றி அரசியல் வட்டாரத்தில் கூறப்படுவதாவது,
அதிமுக கட்சியின் முன்னாள் எம்எல்ஏ விஜயகுமார். இவர் திருவள்ளுவர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். மேலும் தற்போது இவர் எல்லாபுரம் வடக்கு ஒன்றிய அதிமுக பொதுச் செயலாளராக செயல்பட்டு வந்தார்.
தற்போது மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக தமிழக பாஜக சார்பில் நேற்று “சமக்கல்வி எங்கள் உரிமை” என்ற தலைப்பில் கையெழுத்து இயக்கம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தொடங்கி வைத்தார். இதற்கான பணிகளில் தமிழக பாஜகவினர் செயல்பட்டு வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில் மும்மொழி கொள்கைக்கான கையெழுத்து இயக்கம் பெரியபாளையம் அருகில் உள்ள மஞ்சங்கரணை பகுதியில் பாஜக சார்பில் மும்மொழி கொள்கை ஆதரவு கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. அப்போது அந்த பகுதியில் வந்த முன்னாள் அமைச்சர் விஜயகுமார் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்திட்டார். அவர் மும்மொழிக்கு ஆதரவாக கையெழுத்திட்டது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சூழ்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயகுமார் கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி வெளிவந்துள்ளது. அதற்கு காரணமாக கட்சியின் கண்ணியத்திற்கு மாசு விளைவிக்கும் நோக்கில் கட்டுப்பாட்டை மீறியதால் கட்சியின் பொறுப்புகளில் இருந்தும், அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கப்படுவதாக அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டது கட்சியினரிடையே பெரும் விவாதத்துக்கு உள்ளாகி வருகிறது.