காடுகளை அழித்தல் காட்டு தாவரங்களை எரித்தல், காட்டு மரங்களை வெட்டி அப்புறப்படுத்துதல்,போன்றவை காடுகளை அழித்தல் என்றழைக்கப்படுகிறது.
குடும்ப எரிபொருள் தேவையை நிறைவு செய்யவும், புதிய நகரங்களை உருவாக்கவும், தொழில்களை விருத்தி செய்யவும், மரக் கரியை பெற்றிடவும், வேளாண் பரப்பு அதிகரிக்கவும், கட்டிடங்களுக்கான மரச்சாமான்களின் முழுமையான தேவைகளை பூர்த்தி செய்யவும் காடுகளை பெரும்பாலாக அளிக்கப்படுகின்றன.
மரங்களை காற்றே தூய்மைப்படுத்துகின்றன, பூமியில் உள்ள வளிமண்டலத்தை சீர்படுத்துகின்றன. நீர் வளத்தை பெருக்கின்றன. மண் அரிப்பை தடுக்கின்றன. ஆனால் காடுகள் தற்போது நிலைமையில் சிறிது சிறிதாக சுருங்கிக் கொண்டே வருகின்றன. இந்திய அரசு 1980இல் வன பாதுகாப்பு சட்டம் ஒன்றை இயற்றி, காடுகளை அழித்தால் கடுமையான தண்டனை அளிக்க வகை செய்யும் வகையில் 1988 மாற்றி அமைத்துள்ளது இந்திய அரசின் சட்டம்.
காடுகளை அழிப்பதற்கான முக்கிய காரணங்கள்:
1. இயற்கையாக அல்லது மனிதனால் அடிக்கடி ஏற்படும் காட்டுத் தீ.
2.தவறான பொருளாதார பகுப்பாய்வு தான் காடுகளை அழித்தலின் நன்மை தீமைகளை சரிவர புரிந்து கொள்ளாத வகையில் ஏற்படுகிறது.
3.மரப் பொருட்களை ஏற்றுமதி செய்ய கடன் சுமையானது வளர்ந்து வரும் நாடுகளுக்கு ஏற்படுகிறது.





