தமிழகத்தை பொறுத்தவரை பொது விடுமுறைகளை தாண்டி சில உள்ளூர் விடுமுறைகளுக்கும் அந்த மாவட்டங்களை பொறுத்து விடுமுறை நாட்கள் அமைவது வழக்கமான ஒன்று. அதேபோன்று ஏப்ரல் 11ஆம் தேதி ஆகிய நாளை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் பொது விடுமுறையை அறிவித்திருக்கிறார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இது குறித்து தெரிவித்திருப்பதாவது :-
நாளை ஏப்ரல் 11ஆம் தேதி அன்று பங்குனி உத்திர திருவிழா நடைபெற இருப்பதால் தூத்துக்குடியில் இருக்கக்கூடிய அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் பொது விடுமுறை அறிவித்திருக்கிறார். அதிலும் குறிப்பாக பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதக்கூடிய மாணவர்களை தவிர மற்ற அனைவருக்கும் விடுமுறை என்றும் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதக்கூடிய மாணவர்கள் கட்டாயமாக தங்களுடைய தேர்வினை தேர்வு மையங்களுக்கு சென்று எழுதி முடிக்க வேண்டும் என்றும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் நடைபெறக்கூடிய பங்குனி உத்திர திருவிழாவிற்கு தூத்துக்குடி மக்களை தவிர சுற்றி இருக்கக்கூடிய பல மாவட்டங்களில் இருந்தும் தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் திரளானோர் வந்து செல்வர் என்பதற்காக அனைத்து சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். தூத்துக்குடி மாவட்டத்திற்கான உள்ளூர் விடுமுறையை தூத்துக்குடி ஆட்சியர் இளம் பகவத் அவர்கள் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.