பிரபல நடிகர் உடல் நலக்குறைவால் காலமானார்!! சோகத்தில் திரையுலகம்!!

Famous actor Rajesh passes away due to ill health!

சென்னை: பிரபல நடிகர் ராஜேஷ் அவர்கள் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். உடல்நல குறைவு அதாவது (LOW BP) காரணமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே காலமானார். 1949 திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி என்ற இடத்தில் பிறந்தவர் ராஜேஷ். அவரது முழு பெயர் ராஜேஷ் வில்லியம்ஸ் மற்றும் மனைவியின் பெயர் ஜோன் சிலிவியா. மனைவி 2012 இல் மரணம் அடைந்தார்.

1972 முதல் 1979 வரை திருவல்லிக்கேணியில் உள்ள கெல்லேட் மேல்நிலை பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்தார் ராஜேஷ். 1977 முதல் முறையாக “அவள் ஒரு தொடர்கதை” படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். 1979இல் கதாநாயகனாக “கன்னிப்பருவத்திலே” மற்றும் “அச்சமில்லை அச்சமில்லை” என்ற படத்தில் நடித்தார். குணச்சித்திர வேடங்களில் நடிக்க தொடங்கினார். முக்கியமாக அந்த ஏழு நாட்கள், ஆட்டோகிராப், அவள் ஒரு தொடர்கதை, கன்னிப்பருவத்திலே போன்ற படங்கள் அவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது.

நடிகர் மட்டுமல்லாது பின்னணி குரல் கலைஞராகவும், தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராகவும், ஜோதிடராகவும், ஆசிரியராகவும் பணிபுரிந்துள்ளார். மேலும், புத்தகங்கள் மற்றும் கட்டுரைகள் எழுதியுள்ளார். அவர் கிறிஸ்தவராக இருந்த போதிலும் பெரியாரின் சித்தாந்தங்களை பின்பற்றி இருந்தார். அவர் கால் வைக்காத பணித்துறை கிடையாது போலும். வீடு நிலம் வாங்கி விற்கும் வணிகம், முன்னணி கட்டுமானர் மற்றும் உணவகம் நடத்துதல் போன்ற பல முயற்சிகளை மேற்கொண்டு வந்தார் நடிகர் ராஜேஷ். தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் படங்களும் மற்றும் சின்னத்திரை தொடர்களில் நடித்திருக்கிறார்.

49 ஆண்டுகளுக்கும் மேலாக 150 க்கும் அதிகமான படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அவரது இறப்பு திரை உலகின் அதிர்ச்சியை அளித்துள்ளது. மேலும் அவர் கமல்ஹாசன், விஜயகாந்த், முரளி, பாக்கியராஜ் போன்ற  முக்கிய நடிகர்களுடன் நடித்துள்ளார். அவரது உடலானது ராமாபுரத்திலுள்ள அவரது இல்லத்தில் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. தமிழ் திரைத்துறையில் அவரது மரணம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share it :
Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram