மும்பை: மும்பையில் பிரபல நடிகையின் மகனுக்கும் தாய்க்கும் டியூஷன் செல்ல மறுத்ததால் இருவருக்கும் இடையே விவாதம் ஏற்பட்டுள்ளது. இரவு 7 மணி அளவில் டியூசனுக்கு செல்லுமாறு மகனை வற்புறுத்தியதால் விபரீத முடிவை எடுத்த மகன்.
ஹிந்தி மற்றும் குஜராத்தி டிவியில் பணிபுரியும் பிரபல நடிகை கண்டிவாலியில் உள்ள புரூக் கட்டிடத்தில் 51-வது மாடியில் வசித்து வந்தனர். டியூஷன் விவாகரத்தில் அடிக்கடி தாய்க்கும் மகனுக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. தற்போதைய தலைமுறையில் சிறு விஷயத்திற்கு விபரீத முடிவுகளை எடுத்து விடுகின்றனர்.
புதன் கிழமை இரவு 7 மணி அளவில் நடைபெறும் டியூஷன் சென்டருக்கு செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார் நடிகை. விவாதம் ஏற்பட்டு சிறிது நேரத்திலேயே மகன் வீட்டை விட்டு வெளியேற கிளம்பியுள்ளார். அவர்களது குடியிருப்புகளிலிருந்து சிறிது மாடியில் இறங்கியதும் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அடுக்குமாடி குடியிருப்பின் காவலாளி தாயாருக்கு தகவல் கொடுத்துள்ளார். ரத்த வெள்ளத்தில் கிடந்த மகனைக் கண்டு துடித்து துடித்து போன நடிகை உடலை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். பிரேத பரிசோதனையில் மகன் ஒரு உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விபத்து மரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். வாக்கு மூலத்தில், இரவு 7 மணிக்கு டியூசன் செல்லுமாறு வற்புறுத்தியது, மகன் கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறிய சிறிது நேரத்திலேயே குடியிருப்பு காவலாளி மகன் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட செய்தியை கூறினார்.
டியூசனுக்கு செல்லுமாறு வற்புறுத்தால் மகன் இந்த விபரீத முடிவை எடுத்ததாக கூறியுள்ளார். பெரும்பாலும் குழந்தைகளை பெற்றோர்கள் பார்த்து பார்த்து வளர்த்தாலும் சிறிய சிறிய பிரச்சனைகளுக்காக உயிரை மாய்த்துக் கொள்ளும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இந்த சூழ்நிலையில் வளரும் குழந்தைகளுக்கு வெளி உலகம் தெரிவதில்லை.