Cricket: ராஜஸ்தான் மற்றும் மும்பை இரு அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை அணி அபார வெற்றியை பதிவு செய்தது இந்நிலையில் டக் அவுட் ஆன சூரியவன்சி குறித்து ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பரபரப்பு பேச்சு.
நேற்று ராஜஸ்தான் மற்றும் மும்பை இரு அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்றது இதில் ராஜஸ்தான் அணி தாஸ் வென்று பௌலி செய்ய முடிவு செய்தது முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர் முடிவில் 217 ரன்களை குவித்து பெரிய இலக்கை ராஜஸ்தான் அணிக்கு நிர்ணயித்தது. இதில் தொடக்க வீரர்களாக களம் இறங்கிய ரயன் ரிகல்டன் 61 ரண்களும் ரோஹித் சர்மா 53 ரண்களும் எடுத்தனர், தொடர்ந்து களமிறங்கிய சூரியகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் தலா 48 ரன்கள் எடுத்தனர்.
ராஜஸ்தானி கடைசியாக விளையாடிய போட்டியில் வைபவ் சூரிய வன்சி என்ற 14 வயது இளம் வீரர் 35 ரன்கள் சதம் விலாசி சாதனை படைத்தார். இது அனைத்து கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தது. மேலும் பல கிரிக்கெட் வல்லுனர்களும் முன்னாள் வீரர்களும் அவரை பாராட்டி வந்த நிலையில் இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
இரண்டாவதாக களம் இறங்கிய ராஜஸ்தானி அணி தொடக்கத்திலேயே சூரியவன்சி ரன் எதும் எடுக்காமல் தக் அவுட் ஆனார். இதனால் எதிர்பார்ப்புடன் காத்திருந்த ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் இது குறித்து பரவலாக பேசி வருகின்றனர். ராஜஸ்தானி 117 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளும் இழந்து 100 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.