அடேங்கப்பா இத்தனை லட்சமா?? சென்னை vs பெங்களூர் போட்டிக்கு காத்திருக்கும் ரசிகர்கள்!!

Fans waiting for the Chennai vs Bangalore match

Cricket: வருகிற 28ஆம் தேதி அதாவது வருகிற வெள்ளிக்கிழமை அன்று சென்னை மற்றும் பெங்களூர் இடையிலான போட்டி நடைபெற உள்ளது. ஐபிஎல் போட்டி என்றால் சென்னை மும்பை போட்டி என்றாலே அதிக எதிர்பார்ப்பு இருக்கும் தற்போது அந்த எதிர்பார்ப்பை எல்லாம் உடைத்து விட்டு சென்னை பெங்களூர் இரு அணிகள் மோதினால் மாபெரும் எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காண குவிகின்றனர்.

அதனால் அடுத்து சென்னை பெங்களூர் அணி உடன் 28ஆம் தேதி மாத உள்ளது இதற்கான டிக்கெட் விற்பனை தற்போது தொடங்கியுள்ள நிலையில், 35,000 பேர் அமரக்கூடிய மைதானத்தில் நடக்கும் இந்த போட்டியை காண்பதற்காக சுமார் மூன்று லட்சத்திற்கும் அதிகமானோர் டிக்கெட் காக காத்திருக்கின்றன. இதனை ரசிகர்கள் அனைவரும் இணையதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். சென்னை மற்றும் பெங்களூர் இடையிலான போட்டியின் எதிர்பார்ப்பு தற்போது உச்சத்தை அடைந்துள்ளது எனவே கூறலாம்.

இதுவரை சென்னை மற்றும் பெங்களூர் இரு அணிகளும் 33 போட்டியில் விளையாடியுள்ளது. இதில் 21 போட்டிகளில் சென்னை அணியும் 11 போட்டிகளில் பெங்களூரணியும் வெற்றி பெற்றுள்ளன. இதில் அதிகபட்ச அணியின் எண்ணிக்கை ஆக சென்னை அணி பெங்களூர் அணிக்கு எதிராக 226 ரன்கள் எடுத்துள்ளது. குறைந்தபட்ச எண்ணிக்கையாக பெங்களூர் அணி சென்னை அணிக்கு எதிராக 70 ரன்கள் எடுத்துள்ளது. அடுத்து நடைபெற உள்ள சென்னை மற்றும் பெங்களூர் போட்டியில் யாருக்கு வெற்றி என்பதை காத்திருந்து பார்ப்போம்.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram