சென்னை: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் இடையே சில நாட்களாக பல்வேறு வார்த்தை மோதல்கள் நடந்து வந்தது. இவர்கள் இருவருக்கிடையே ஆன பிரச்சனை இப்பொழுது ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளது. மேலும் அணுமணி ராமதாஸ் கட்சியின் தலைவராகவும் பொதுச்செயலாளராகவும் ராமதாஸ் நியமிக்க உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இவர்கள் இருவருக்கிடையே பிரச்சனை எதனால் வந்தது என்று பார்த்தால் ராமதாஸின் மகளின் மகன் முகுந்தனால் வந்தது. முகுந்தனை இளைஞர் அணி செயலாளராக ராமதாஸ் அறிவித்தது இருவருக்கும் கருத்து வேறுபாடு உருவாக்க காரணமாக இருந்தது.
அறிவித்த போது மேடையில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு மேடையில் இருந்து அன்புமணி சென்றுவிட்டார் இதனால் ஆத்திரமடைந்த பாமக நிறுவனர் ராமதாஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீ க்குகிறேன் என்றும் அன்புமணி செயல் தலைவராக நியமிப்பதாக அறிக்கைவெளியிட்டார். அன்புமணி பின்பு செய்தியாளர்கள் சந்திப்பில் நான் தான் தலைவர் என்றும் பொதுக்குழு கூட்டாமல் என்னை யாரும் தலைவர் பதவியிலிருந்து நீக்க முடியாது என்றும் வார்த்தை மோதல் நீடித்தது. பின்பு ராமதாஸ் சில நிர்வாகிகளை தைலாபுரம் தோட்டத்திற்கு அழைத்து விவாதித்து பல்வேறு கட்சி நிர்வாகிகளை பதவியில் இருந்து நீக்கினார்.
இதனை அறிந்து அன்புமணி என் அனுமதி இல்லாமல் கட்சியின் பதவியில் இருந்து எந்த நிர்வாகிகளையும் நீக்க முடியாது.அனைவரும் அவர்கள் பதவியை நீடிக்கிறீர்கள் என்று அன்புமணி அறிக்கை விடுத்தார். மேலும் ராமதாஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் அன்புமணி மீது பல்வேறு குற்றங்களை அடுக்கடுக்காக கூறினார். தாயின் மீது தண்ணீர் பாட்டிலை வீசினார் என்றும் கட்சியை தானே வழிநடத்த வேண்டும் என்று பேராசை வந்து விட்டதா என்று அன்புமணி ராமதாஸ் மீது குற்றம் சாட்டினார். இதனை அன்புமணி இடம் கேட்ட பொழுது இது முற்றிலும் பொய்யான வதந்தி என்றும் தன் தாய் மீது நான் எப்படி பாட்டிலை வீசுவேன் என்றும் எனது தாய் தான் எனக்கு உலகம் என்றும் கூறினார்.
இதற்குரிய பல்வேறு நிர்வாகிகள் அறிவுறுத்தலில் பெயரில் பாமக நிறுவனர் ராமதாஸ் மனம் இறங்கி வந்துள்ளதாக செய்தி வட்டாரங்களில் பேசப்படுகிறது. மேலும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு நாட்கள் குறைவாக உள்ள காரணத்தினால் ராமதாஸ் அன்புமணியே முன்னிறுத்த இறங்கி வந்துள்ளார் என்று கூறப்படுகிறது. மேலும் விரைவில் இரண்டு பேரும் சமரசம் செய்து கொள்வார்கள் என்றும் நிர்வாகிகள் பொதுக்குழு கூட்டம் விரைவில் நடைபெறும் என்றும் தைலாபுரம் தோட்டத்திலிருந்து செய்திகள் வந்துள்ளது. மேலும் மற்ற கட்சித் தலைவர்கள் பாமக கட்சி தன்னை அனைவரும் பார்க்க வேண்டும் பேச வேண்டும் என்பதற்காக அப்பா மகன் இருவரும் சண்டை போடுவது போல் நடித்து அனைவரிடையே கவனத்தில் ஈர்க்க முயற்சிக்கின்றனர் என்று செய்தி வட்டாரங்களில் பேசப்படுகின்றன.