ரஷ்யா இந்தியா சீனா கூட்டமைப்பு!! மீண்டும் உயிர்ப்பிக்கும் RIC  அணி !!

Federation of Russia India China!!

மாஸ்கோ: ரஷ்யா மற்றும் உக்கரை போர் காரணமாக மேற்கத்திய நாடுகளின் மீது கடும் அழுத்தத்தை கொண்டுள்ளது ரஷ்யா. இந்நிலையில் இந்தியாவுடனான உறவை உறவை வலுப்படுத்துவது மிக கவனம் செலுத்தி வருகிறார் ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடின். இந்தியாவுடனான  நட்பை  தீவிர படைத்துவது மட்டுமின்றி இந்தியா-சீனா உறவையும் வலிமைபடுத்த வேண்டும் என  திட்டமிட்டு வருகிறதாம் ரஷ்யா. அண்மையில் ரஷ்யாவின்  வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் இந்தியாவிற்கு வருகை புரிந்துள்ளார்.

சந்திப்பின் போது பாதுகாப்பு ஒப்பந்தங்கள் மற்றும் வர்த்தக ஒத்துழைப்பு போன்றவற்ற அதிகரிப்பது குறித்து பேச்சு வார்த்தைகள் நடந்தன என்று தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்க உள்ளிட்ட நாடுகளில் ஏற்படும் மோதல்களுக்கு இடையே இந்தியா போன்ற ஆசிய நாடுகளுடன் நெருக்கமாக இருக்க  நினைக்கிறது ரஷ்யா. இந்தியா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் உள்ளடங்கிய RIC என்ற மூலோபாயக் குழுவினை மீண்டும் கொண்டுவர ரஷ்யா முயன்று வருகிறது.

குவாட் எனப்படும் இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகளின் கூட்டணிக்கு எதிராக ஏற்படும் சமநிலையை உருவாக்க இந்த திட்டம் உதவும் என ரஷ்யா திட்டமிட்டுள்ளது.  ரஷ்யாவுடனான நீண்ட காலம் நட்பினை தக்க வைத்துக் கொள்ள நினைக்கிறது இந்தியா. அதே நேரத்தில், வர்த்தகம் மற்றும் தொழில்நுட்ப பாதுகாப்பு போன்று துறையிலும் மேற்கத்திய நாடுகளுடன் வலுவான உறவில் இருக்க இந்தியா திட்டமிட்டு வருகிறது.

ரஷ்யாவுக்கு அதிக அரசியல் ஆதரவு, சக்திவாய்ந்த நட்பு நாடு மற்றும் வலுவான வர்த்தக கூட்டாண்மை போன்றவற்ற இந்தியாவில் நெருக்கமாக இருந்தால் கிடைக்கும்.  இந்தியா ரஷ்யா சீனா கூட்டமைப்பு வலுவாக மாற வேண்டும் என்று ரஷ்யா முடிவு செய்ததுள்ளது. மேலும், இந்தியா மேற்கத்திய நாடுகளை எதிர்க்கவும் முடிவு செய்துள்ளது ரஷ்யா . அனைத்து நாடுகளுடன் நட்பாக இருக்க வேண்டும் யாரையும் எதிரியாக நினைக்க கூடாது என்று இந்தியா ஆலோசித்து வருகிறது.

Share it :
Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram