இறுதியில் இந்திய அணி தான்!! மோதும் மற்றொரு அணி இதுதான்.. ஆஸி வீரர் ஓபன் டாக்!!

final team is the Indian team

Cricket : சாம்பியன்ஸ் டிராபி தொடர் 2025 போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் இந்த அணிதான் மோதும் என ஆஸ்திரேலிய வீரர் கருத்து தெரிவித்துள்ளார்.

2025 ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இதனை பாகிஸ்தான் அணி நிர்வாகம் நடத்துகிறது. இதில் முதல் அணியாக போட்டியில் கலந்து கொண்டது பாகிஸ்தான் அணி அதைப்போலவே முதல் அணியாகவே அரையிறுதிக்கு செல்ல வாய்ப்பின்றி வெளியேறியது. தொடர் இரண்டு போட்டிகள் தோல்வி அடைந்ததால் பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் இரு அணிகளும் அரையிறுதிக்கு செல்லாமல் வெளியேறியது. இந்தியா மற்றும் நியூசிலாந்து இரு அணிகளும் முதல் அணிகளாக அறிவுறுதிக்கு முன்னேறி உள்ளது.

இந்நிலையில் ஆஸ்திரேலிய வீரர் டேனியல் கிறிஸ்டியன் கருத்துக்களை பகிர்ந்துள்ளார், அதில் அவர் கூறுகையில் இந்தத் தொடரில் ஆஸ்திரேலியா அணி மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறது, இதற்கு முன் விளையாடிய பாகிஸ்தான் மற்றும் இலங்கை இரு அணிகளுக்கு எதிரான போட்டிகளில் சரியாக விளையாடவில்லை தான், ஆனால் இந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில் சிறப்பாக விளையாடி வருகிறது.

முக்கியமான வீரர்கள் போட்டியில் விளையாடவில்லை என்றாலும் இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடி வருகின்றனர். நாங்கள் விளையாடிய காலத்தில் இருந்தது போல இப்போது இல்லை. எங்கள் அணி இந்த சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்தி வந்தால் இறுதி ஆட்டத்தில் மோத போகும் இரு அணிகள் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா தான் என்று கூறியுள்ளார்.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram