அன்புமணியும் ராமதாசும் இணைய அரங்கேறிய தீக்குளிப்பு ஒத்திகை!! யாருடைய தூண்டல்!!

சமீபகாலமாகவே பாட்டாளி மக்கள் கட்சியில் நிறுவன ராமதாஸனும் அவரது மகன் மற்றும் தலைவர் ஆன அன்புமணிக்கும் இடையே தொடர்ந்து சர்ச்சை எழுந்து வருகின்றது. இதன் காரணமாக கட்சி தொண்டர்கள் இருவரிடமும் மாட்டிக் கொண்டு யாருக்கு சப்போர்ட் செய்வது, ஒருவர் பின் நின்றால் இன்னொருவர் பகைக்கு ஆளாக வேண்டும். இருக்கிற இடம் தெரியாம போயிடுவோம் என்று பலர் கூட்டத்தையே அவாய்ட் செய்து வந்திருந்தனர். இந்நிலையில், நேற்று பாமக சார்பில் ராமதாஸ் தலைமையில் ஓமந்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் செயற்குழு கூட்டம் நடைபெற்றுள்ளது.

அதே நேரத்தில் அன்புமணி சார்பில் பனையூரில் கூட்டம் நடைபெற்று உள்ளது. அவரவருக்கு சப்போர்ட் செய்பவர்கள் பிரிந்து இந்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் நேற்று காலை கூட்டம் நடந்த நிலையில் மாலையில் தைலாபுரத்தில் ராமதாஸ் வீட்டின் முன் பாமக உறுப்பினர்கள் ஐந்து பேர் இருவரும் இணைய வேண்டும் என்ற கோரிக்கை வைத்து மண்ணெண்ணையை மேலே ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முற்பட்டு உள்ளனர். அங்குள்ள காவலர்கள் விரைந்து அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி பின் விசாரிக்க தொடங்கியுள்ளனர். காலையில் நடந்த செயற்குழு கூட்டத்தில் அன்புமணி கலந்து கொள்ளாதது தங்களுக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. சட்டமன்ற தேர்தல் வருவதை ஒட்டி தலைவர்கள் இருவரும் சேர்ந்து கட்சியை வழிநடத்த வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர். மேலும் அவர்களிடம் விசாரித்ததில், கீழ கொண்ட நல்லூர் கிராமத்தை சேர்ந்த பாமகவினர் என்று தெரியவந்துள்ளது. மேலும் இவர்கள் கோரிக்கைக்கு பின்னால் இவர்களை ஏவி விட்டது யார் என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram