புது டெல்லி: இந்தியாவில் 79 ஆவது சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. புதிய பாரதம் என்ற கருப்பொருளில் நடைபெறும் சுதந்திர தின விழா இன்று காலை 7:30 மணி அளவில் தொடங்கியது. விழாவுக்கு பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், செயலாளர் ராஜேஷ் குமார் சிங் மற்றும் இணை மந்திரி சஞ்சய் சேட் ஆகியோர் விழாவிற்கு வருகை தந்தனர். காவல் மரியாதையுடன் ராணுவ தளபதி அறிமுகப்படுத்தப்பட்டார்.
அணிவகுப்பு மரியாதை செலுத்தப்பட்டது. முப்படைகள் மற்றும் டெல்லி போலீஸ் ஆகிய நான்கு பிரிவுகளில் இருந்து தலா 24 பேர் கொண்ட இந்த அணிவகுப்புக்கு இந்திய விமானப்படை தலைமை தாங்கியது. அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு பின் செங்கோட்டையின் கொத்தளம் பகுதிக்கு புறப்பட்டார் மோடி. பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் முப்படைகளின் தளபதி அனில் சௌகான் பிரதமரை வரவேற்றனர்.
பிரதமர் மோடிக்கு 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். அப்போது ஹெலிகாப்டரில் இருந்து மலர்கள் தூவப்பட்டது. குறிப்பாக ஒரு ஹெலிகாப்டரில் தேசியக் கொடியும் மற்றொரு ஹெலிகாப்டரில் ஆபரேஷன் சிந்தூரை குறிக்கும் வகையில் கொடியும் கொண்டு பறக்க விடப்பட்டது.
79வது சுதந்திர தின விழாவின் போது பிரதமர் உரையாற்றுகையில், வரும் தீபாவளியை நான் உங்களுக்கு இரட்டை தீபாவளியாக தரப்போகிறேன் இந்த தீபாவளியில் நான் ஆட்டு மக்களுக்கு பெரிய பரிசை பெறுவார்கள். ஜி எஸ் டி சீர்திருத்தங்களை அடுத்த தலைமுறைக்கு நாங்கள் கொண்டு வருகிறோம். பரிசு வழங்குவதற்காக தனி குழு அமைக்கப்படும். நாடு முழுவதும் வரி சுமையை குறைக்க இருக்கும்.
எட்டு ஆண்டுகளுக்கு முன்பு அரசாங்கம் புதிய சீர்திருத்தங்களை மேற்கொண்டது. ஏராளமான வரிகள் மற்றும் உள்ளூர் வழிகளை கொண்ட ஜிஎஸ்டி ஆட்சியை குறிப்பிட்டு செயல்முறையை எளிதாக்க ஜிஎஸ்டி ஜூலை 1, 2017 ல் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை மறுபரிசீலனை செய்யும் நேரம் வந்துவிட்டதாகவும் மறு ஆய்வு குழு அமைக்கப்பட உள்ளதாக பிரதமர் மோடி கூறினார்.