இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் இஸ்லாமாபாத் பகுதியில் பருவமழை தீவிரமடைந்த நிலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தீவிர கனமழையால் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது.
கடந்த சில நாட்களாக பருவமழை தீவிரமடைந்து உள்ள நிலையில் பஞ்சாப், கைபர் பக்துவா, சிந்து மற்றும் பலூசிஸ்தான் போன்ற மாகாணங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. பருவமழை தீவிரமடைந்த நிலையில் பல நகரங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் மூன்று வீடுகள் தரைமட்டமானது.
கட்டிட இடிபாடுகளில் சிக்கியது மட்டுமல்லாமல் வெள்ளப்பெருக்கிலும் சிக்கி சுமார் 116 பேர் பலியாகி உள்ளனர். இதில் 150 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மேலும் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 124 ஆக அதிகரித்துள்ளது. வெள்ளப்பெருக்கு மற்றும் கன மழையால் வீடுகளை இழந்தவர்களுக்கு நிவாரண முகாம்களில் தற்போதைக்கு தங்க வைக்கப்பட்டுள்ளது.
நிவாரண குழுக்கள் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடிப்படை தேவைகளை வழங்கி வருகின்றன. பருவமழை தீவிரமடைந்த நிலையில் பலி எண்ணிக்கை 124 ஆக அதிகரித்துள்ளது பாகிஸ்தானில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.