மேற்கு ஆப்பிரிக்கா நாடான நைஜீரியாவில் பெருமழை காரணமாக கொட்டி தீர்க்கும் கன மழையால் இதுவரை 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்று தகவல் கிடைத்துள்ளது.
சிலர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டிருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
வெள்ளபாதிப்பில் சிக்கி ஆயிரக்கணக்கான மக்கள் புலம்பெயர்ந்து வருகின்றனர்..
60 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பேரழிவை நைஜீரியா சந்தித்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.
நைஜீரியாவில் மொக்வா நகரம் வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
பலத்த மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் 200 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் பலர் மாயமாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
நைஜீரியாவில் அமைந்துள்ள முக்கிய வர்த்தக நகரமான மொக்வா வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது
நைஜீரியாவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதற்கான காரணம் :
கடுமையாக கன மழை போதிய வடிகால் வசதியின்மை நீர் வழிகள் வீடு கட்டுதல் கழிவுகளை கொட்டுதல் போன்ற காரணங்களால் வெள்ளம் அதிகரித்துள்ளது என்று கூறப்படுகிறது.
கன மழை காரணமாக நைஜீரியா மக்கள் பெரும் அளவில் பாதிப்படைந்து உள்ளனர். 500க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு இறந்திருக்கலாம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.