காசா: இஸ்ரேல் காசா மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் காசாவில் உணவு பஞ்சம் அதிகரித்து வருகிறது. பாஸாவில் தொடரும் உணவு பஞ்சத்தால் மூன்றில் ஒருவருக்கு உணவு இல்லாமல் பட்டினியால் வாடுவதாக ஐ நா எச்சரித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையில் உணவு உதவி திட்டம் காசாவின் உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளது எச்சரித்துள்ளது. ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்து வருவதால் 90 ஆயிரம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு உடனடியாக சிகிச்சை தேவைப்படுகிறது. காசாவுக்கு செல்லும் பொருட்கள் இஸ்ரேல் வழியாக செல்ல வேண்டி இருப்பதனால் இஸ்ரேல் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதனால் காசாவுக்கு உதவிப் பொருட்கள் சென்றடைவதற்கு வேறு வழி இல்லாமல் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. காசாவுக்கு செல்வதற்கு விமானம் மூலம் செல்ல இஸ்ரேல் அனுமதி அளித்துள்ள நிலையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகள் உணவு பொருட்களை வழங்க அனுமதி அளிக்காமல் இஸ்ரேல் தாமதிக்கிறது.
இது போன்ற நடவடிக்கைகளை ஐக்கிய நாடுகள் சபை கடுமையாக விமர்சித்துள்ளது. காசாவுக்கு உணவு பொருட்கள் வழங்க பிரான்ஸ் இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. மே 27 முதல் தற்போது வரை உணவுக்காக காத்திருந்த ஆயிரத்திற்கு மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
போர் நிறுத்தம் மற்றும் பணைய கைதிகள் மீது ஒப்பந்தம் ஆகியவை கேள்விக்குறியாகவே உள்ளது. கடந்த 2023 அக்டோபர் மாதம் 7ம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது ஹமாஸ் குழுவினர் தாக்குதல் நடத்தியதில் 1200 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 251 பேரை பணய கைதிகளாக பிடித்து சென்றனர். சுகாதார அமைச்சகத்தின் தகவல்படி இதுவரை காசாவில் 59 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
காசாவில் பெரும்பாலான மக்கள் உணவு பஞ்சத்தால் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலில் 90 சதவீத வீடுகள் பாதிக்கப்பட்டது. உலகளாவிய நிபுணர்கள் உணவு பஞ்சம் ஏற்பட்டு உயிரிழப்புகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக எச்சரித்துள்ளனர். மேலும் எரிபொருள் உணவு மற்றும் மருந்து ஆகியவற்றிற்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றனர்.