காசா: இஸ்ரேல் காசா போரில் காசாவில் உணவு இன்றி தவிக்கும் மக்களின் நிலையை எடுத்துக் கூறும் வகையில் சிறுவன் பேசிய வீடியோ ஒன்று தற்போது வைரல் ஆகி வருகிறது. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே கடந்த 2023 அக்டோபர் மாதம் தொடங்கிய போர் 15 மாதங்களாக நடைபெற்று வருகிறது. இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதலால் காசாவில் உள்ள பல்வேறு பகுதிகள் சேதம் அடைந்துள்ளது. இந்த தாக்குதலில் மக்கள் தங்களது வீடுகளை இழந்து பசி பட்டினியால் வாடி வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு 48 மணி நேரத்துக்கு காசாவில் குழந்தைகளுக்கு உணவு கிடைக்கவில்லை.
இது தொடர்ந்தால் அங்குள்ள குழந்தைகள் அனைவரும் இறந்து விடுவர் என்று ஐக்கிய நாடுகள் தெரிவித்தது. அமெரிக்க அதிபரின் பேச்சுவார்த்தையால் இஸ்ரேல் காசா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இஸ்ரேலும் பாலஸ்தீன கைதிகளை விடுவித்தது. போர் நிறுத்தப்பட்டது என நினைத்த வேளையில் மீண்டும் காசா மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும், இஸ்ரேல் நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு , போரை நிறுத்துவதற்கான எந்த வாய்ப்பும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் காசாவில் உள்ள குழந்தைகள் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டு குழந்தைகள் அவதிப்படுகின்றனர். காசாவில் மே மாதத்தில் மட்டும் ஊட்டச்சத்து குறைபாட்டினால் சிகிச்சை அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பிறந்த ஆறு மாதங்கள் ஆன குழந்தைகள் முதல் ஐந்து வயது வரையிலான குழந்தைகளில் 5119 குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டின் காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த ஏப்ரல் மாதத்தை ஒப்பிடு வகையில் 50 சதவீதம் மற்றும் பிப்ரவரி மாதத்தில் ஒப்பீடு 150 சதவீதம் அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காசாவில் எங்களுக்கு சாப்பிடுவதற்கு உணவு எதுவும் இல்லை. மாவு கூட இல்லை. ஒவ்வொரு நாளும் உணவுக்காக காத்துக் கிடக்கிறோம். உணவுக்காக கொஞ்சமாவது எங்கள் மீது இரக்கம் காட்டுங்கள். உணவு இல்லாமல் நாங்கள் மண்ணைத் தின்று வாழ வேண்டுமா? இங்கு ஒரு பிரட்டின் விலை இந்திய மதிப்பிற்கு 595 ரூபாய் என்று கூறி இருந்தார். மேலும், எங்களுக்கு உணவு கொடுங்கள் என்று கண்ணீர் மல்க பேசினார். இந்த வீடியோ பார்ப்போரை கண்கலங்க செய்கிறது.





