பாஜக கட்சியை விட்டு வெளியே சென்றவர்களில் காயத்ரி ரகுராமும் ஒருவர். அவ்வபோது அண்ணாமலை குறித்து கண்டனம் தெரிவித்து வருவார். அந்த வகையில் தற்பொழுது அதிமுக சம்மதித்தால் விஜயை எதிர்த்து போட்டியிட தயார் என்று கூறியுள்ளார். நாகர்கோவிலில் செய்திகளை சந்தித்த காயத்ரி ரகுராம், பாஜக தற்போதைய அரசியலில் எந்த செயல்பாடு மேற்கொண்டு வருகிறது என்பது குறித்தும் அதிமுக தன்னை கட்சியில் இணைத்துக் கொள்ளும் படியும் பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது, தலைவர் பதவி இல்லாமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் அண்ணாமலை வாய்க்கு வந்ததை எல்லாம் பேசுகிறார்.
அதில் ஒன்றுதான் அதிமுக கூட்டணி வைக்க தவமாய் தவம் கிடப்பது என்று கூறியது. இதுவரை தமிழ்நாட்டின் வலி, உணர்வு என்று எது பற்றியும் அவர்களுக்கு கவலை இல்லை. அதிமுக தலைமை மட்டும் தன்னை ஒருமுறை அனுமதித்தால் விஜய் எதிர்த்த கூட போட்டியிட நான் தயாராக உள்ளேன். அதேபோல மக்கள் கணக்கெடுப்பு நடத்தி தொகுதி சீரமைப்பு செய்வது என்பது பாஜகவின் சூழ்ச்சி தந்திரம். இதற்கு தமிழகத்தில் உள்ள பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தும் அண்ணாமலை தமிழகத்திற்கு எதிரான வேலைகளை தான் இங்கிருந்து செய்து கொண்டிருக்கிறார்.
அதேபோல தான் தமிழ்நாட்டில் நடக்கும் பிரச்சனை குறித்து ஆளும் கட்சியிடம் கேட்டால் அதை திசை திருப்ப பல வேலைகளை செய்கின்றனர். அவர்களின் வாரிசை கொண்டு வருவதற்காக அவர்கள் படும் பாடானது இங்கிருக்கும் பிள்ளைகளிடம் காட்டுவதில்லை அதற்கு மாறாக வஞ்சிக்க செய்கிறார்கள். ஜெயலலிதா அம்மா ஆட்சி காலத்தில் இருந்த பொழுது யார் என்ன தவறு செய்திருந்தாலும் அவர்கள் பதவியில் இருந்தாலும் பதவி நீக்கம் செய்யப்படும். ஆனால் இந்த ஆட்சியில் பதவியில் இருப்பவர்கள் தவறு செய்தாலும் பிரமோஷன் கொடுக்கும் நிலை வந்துள்ளது. அப்பா மகன் இருவரும் மாற்றி மாற்றி தங்களுக்கான மதிப்பெண்ணை போட்டுக் கொள்கிறார்கள். ஆனால் உண்மையிலேயே இவர்களின் மதிப்பு பூஜ்ஜியம் சட்ட ஒழுங்கும் பூஜ்ஜியமில் தான் உள்ளது எனக்கு கூறியுள்ளார்.