தமிழ்நாடு அரசு நடத்தும் டிஎன்பிஎஸ்சி, மத்திய அரசின் எஸ்எஸ்சி ரயில்வே மற்றும் வங்கி பணிகளில் சேர போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி கொண்டிருக்கிறீர்கள் என்றால் தமிழக அரசு வழங்கும் இலவச பயிற்சியை பயன்படுத்தி கொள்ளுங்கள் .மத்திய ,மாநில அரசு பணிபுரிய பெறவேண்டி நம்மில் பலர் தனியார் நடத்தும் வகுப்புகளுக்கு சென்று போட்டிக்கு தயார் ஆகி வருகின்றார் .
தமிழ்நாடு அரசின் போட்டித் தேர்வுகள் பயிற்சி மையம் மூலம் சென்னையில் இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளது. உங்கள் கனவு அரசு பணியில் சேர வேண்டும் என்பதா? இந்த வாய்ப்பை தமிழக அரசே ஏற்படுத்தி கொடுக்கிறது. என்றால் இந்த வாய்ப்பை மட்டும் இழந்து விடாதீர்கள். TNPSC, SSC, RRB, BANKING ஆகியவற்றிற்கான தேர்வை 6 மாத கால பயிற்சியை சென்னையில் கட்டணமில்லாமல் இலவசமாக தமிழக அரசு ஏற்படுத்தி தருகிறது.
தேர்வுகள் :
தமிழ்நாடு அரசின் பல்வேறு பணிகளுக்கு TNPSC மூலம் பணியாளர்களை தேர்வு செய்து வருகிறது. அதே போல் மத்திய அரசும் SSC தேர்வை நடத்தி பணியாளர்களை தேர்வு செய்து வருகிறது. பொதுத்துறை வங்கியில் உள்ள காலிப்பணியிடங்களை IBPS மூலமாகவும் ,ரயில்வே துறையில் இருக்கும் காலிப்பணியிடங்களை RRB மூலமாகவும் பணியாளர்களை தேர்வு செய்து வருகிறது.
இலவச பயிற்சி :
TNPSC, SSC, IBPS, RRB போன்ற முகாம்களின் மூலம் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு தமிழக அரசு நடத்தும் கட்டணமில்லா வகுப்புகளை ஏற்படுத்தி தருகிறது.
இடம் :
சென்னை, சேப்பாக்கம் வளாகம் ,300 இடங்களுக்கு மற்றும் சென்னை பழைய வண்ணாரப்பேட்டை சர்தியாகராயா கல்லூரி.
பயிற்சி வகுப்புகள் நேரம் :
பிற்பகல் 2.00 மணி முதல் 5.00 மணி வரை வாராந்திர வேலை நாட்கள்.
கல்வி தகுதி :
10 தேர்ச்சி பெற்றிருப்பதோடு 01.01.2025 அன்று 18 வயது பூர்த்தி ஆகி இருக்க வேண்டும் .
விண்ணப்பங்கள் பதிவு :
தேர்வர்க்கான இணையவழி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன https://www.cecc.in/. 16.05.2025 முதல் 31.05.2025 விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 044-25954905 மற்றும் 044-28510537
ஜூன் மாதம் முதல் பயிற்சி வகுப்புகள் தொடங்க உள்ளது.