ரேஷன் கடைகளில் மாதம் தோறும் வீடுகளுக்கு தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சலுகை விலையில் வழங்கப்பட்டு வருகின்றது. ரேஷன் கடைகளில் பாதி நேரங்களில் பொருட்கள் இல்லை என்று சொல்லிவிட்டு அவற்றை பதுக்கி விற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கென்று பிரத்தியேகமாக குடிமை பொருள் வழங்கல் குற்றப் பிரிவு காவல் துறை இதனை விசாரித்து வந்துள்ளனர். இந்நிலையில் அவர்கள் கோழி பண்ணைகளில் இருந்து ரேஷன் அரிசியை கையும் களவுமாக பிடித்துள்ளனர். மேலும் ரேஷன் அட்டைதாரர்களும் ரேஷன் கடையில் இருந்து அரிசியை வாங்கிவிட்டு அதை மற்றொரு இடத்தில் காசிற்கு விற்று விடுகிறார்கள். இதுவும் சட்டப்படி குற்றமாகும். வீட்டில் தேவை இருப்பின் ரேஷன் அரிசியை வாங்க வேண்டும் இல்லை என்றால் அது தேவைப்படுவோருக்கு கொண்டு போய் சேர்க்கப்படும் என்று குற்றப் புலனாய்வு காவல்துறை எடுத்துரைத்துள்ளது.
அங்கு அதிக அளவு ரேஷன் அரிசி தீவனத்திற்காக விற்கப்பட்டுள்ளது. இந்த தீவனம் வெளியே வாங்கினால் காசு கூட என்கின்ற காரணத்தினால் இவ்வாறு பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கோழி பண்ணையில் ரேஷன் அரிசிகளை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று குற்றப்பிரிவு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுவரை ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக 4608 வழக்குகள் போடப்பட்டுள்ளதாகவும், 5120 பேர் கைதும் செய்யப்பட்டுள்ளனர். அது மட்டுமல்லாது 56 பேருக்கு மேல் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. மேலும் இதுவரை 1878 டன் அரிசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று தகவல் கிடைத்துள்ளது.