உலகில் இதுவரை காமனான ரத்த வகைகள் தான் அதிகபட்சம் அனைவரிடத்திலும் காணப்படும். பெரும்பாலும் அறியப்பட்டது ஏபி நெகட்டிவ், ஏ பி பாசிட்டிவ், பி பாசிடிவ், பி நெகடிவ், ஓ பாசிடிவ் ஓ நெகட்டிவ், ஏ பாசிடிவ், ஏ நெகட்டிவ் ஆகியவைதான். இதையும் சேர்த்து உலகில் 47 வகை ரத்த வகைகள் கண்டறியப்பட்டுள்ளன. பெரும்பாலும் காணப்படும் ரத்த வகையில் ஏபி நெகட்டிவ் ரத்த வகை மட்டும் அவ்வளவு எளிதில் கிடைக்காது.
இது இல்லாத மற்ற வகை ரத்தங்கள் குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே காணப்படுகின்றது. ஏதாவது ஒரு எமர்ஜென்சி நீட் இவர்களுக்கு ஏற்பட்டால் அல்லது ரத்தம் தேவைப்பட்டால் இவர்களுக்கு ரத்தம் வழங்கவே குறிப்பிட்ட நபர்கள் தான் இருப்பார்கள். ஒரு சில நேரங்களில் பிற நாடுகளில் இருந்து எல்லாம் அவசரத்திற்கு ரத்தம் தேவைக்காக அழைத்து வரப்படுபவர்களும் உண்டு. இந்நிலையில், சமீபத்தில் பிறந்த ஒரு பிரஞ்சுப் பெண்ணுக்கு க்வாடா நெகட்டிவ் என்ற ரத்த வகை ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ரத்த வகை புதிய மாற்றங்களைக் கொண்டுள்ளது. மேலும் இந்த ரத்த வகை உள்ள ஒரே பெண் அந்த பிரெஞ்சு பெண் தான். இந்த ரத்த வகை உலக அளவில் கண்டறியப்பட்ட ரத்த வகையில் 48வது ரகம் என்று ஆய்வாளர்கள் கருத்தை தெரிவித்துள்ளனர். மேலும் இந்த ரத்த வகை புதிய மாடுலேஷன் ஆக இருப்பதைக் கண்ட ஆய்வாளர்கள் அதிர்ச்சி அடைந்திருந்தனர்.