பழுது பார்த்த இடத்தில் காவு வாங்கப்பட்ட உயிர்!! உஷார் மக்களே!!

மயிலாடுதுறையில் ஃப்ரிட்ஜ் பழுதுபார்க்க நேரிடும் போது பரிதாபமாக பலியான உயிர். அனைவர் வீட்டிலும் பிரிட்ஜ் உள்ளது. பிரிட்ஜில் உள்ள கம்ப்ரஸரை இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை சர்வீஸ் செய்து கொள்வது நல்லது என்று கூறுகின்றனர் அதன் வல்லுநர்கள். பிரிட்ஜின் கம்பரசரில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக பழுது பார்க்க அருகில் உள்ள சர்வீஸ் கடைகளை நாடுவது இயல்புதான். அப்படி நாடிதான் இந்த சம்பவமும் அரங்கேறி உள்ளது. மயிலாடுதுறையில் காமராஜர் பஸ் நிலையம் அருகே மின்சார பொருட்கள் பழுது பார்க்கும் கடை வைத்துள்ளார் பாலாஜி.

இவர் கடையில் சர்வீஸ் செய்யும் மேனாக கணேஷ் என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மதியம் பழுதான பிரிட்ஜை சர்வீஸ் செய்ய பாலாஜி முற்பட்டுள்ளார். அப்பொழுது எதிர்பாராத வகையில் ஃப்ரிட்ஜ் கம்ப்ரஸர் வெடித்து சிதறி உள்ளது. அருகே இருந்த சர்வீஸ் மேன் கணேஷிற்கும் பலத்த காயம். இதைக் கண்ட பகுதி மக்கள் அவர்களை ஆம்புலன்ஸ் வரவழைத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மருத்துவமனைக்கு சென்றவுடன் இருவரையும் பரிசோதித்த டாக்டர் வரவழியிலேயே பாலாஜி உயிர் பிரிந்ததாகவும், கணேஷ் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுமாறு கூறியுள்ளனர். இது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சர்வீஸ் செய்ய முயலும் போது அரங்கேறியஅரங்கேறிய சோக நிகழ்வால் அனைத்து சர்வீஸ் மேன்களும் கதி கலங்கி உள்ளனர்.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram