சினிமா துறையில் முன்னணியில் இருக்கக்கூடிய இசையமைப்பாளராக அனிருத் அவர்கள் திகழ்ந்து வருகிறார். தொட்டதெல்லாம் வெற்றி என்பது போல இவர் அமைத்த இசை எல்லாமே ரசிகர்கள் இடையே மிகப் பெரிய வெற்றியை கண்டு வருகிறது.
ஒருபுறம் இசையில் கோலோச்சி நிற்கும் இசையமைப்பாளர் அனிருத், மற்றொரு பக்கம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மற்றும் சன் பிக்சர்ஸ் போன்றவற்றிற்கு உரிமையாளராக திகழும் காவியா மாறன் இவர்கள் இருவரையும் இணைத்து வைத்து இணையத்தில் மிக வேகமாக காதல் கிசுகிசுக்கள் பரப்பப்பட்டு வருகிறது.
சன் பிக்சர்ஸ் இன் அனைத்து படங்களிலும் இசையமைப்பாளராக பணி புரியக்கூடியவர் அனிருத் அவர்கள். ஏற்கனவே காவியா மாறனும் அனிருத்தும் நல்ல நட்பின் பாதையில் சென்று கொண்டிருக்க கூடிய தருணத்தில் இவர்களை இணைத்து வைத்து பலவிதமான காதல் கிசுகிசுக்கள் வெளி வருவது சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது.
அனிருத் அவர்கள் காவியமாறனின் குடும்ப நண்பராகவும் விளங்கி வருகிறார். இவர்களுக்கிடையில் நல்ல நட்பு மட்டுமே இருக்கிறது என்றும் இதனை காதல் என யாரும் தவறாக புரிந்து கொள்ள வேண்டாம் என்றும் ரசிகர்களுக்கு வேண்டுகோள்களை விடுத்திருக்கின்றனர். காவ்யா மாறன் IPL தொடரில் தன்னுடைய அணியான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை ஜெயிக்க வைப்பதற்கான முழு முயற்சி மற்றும் ஈடுபாட்டில் இருக்க அனிருத்தோ தன்னுடைய திரைப்படங்களில் மிகவும் பிசியாக இசை அமைத்துக் கொண்டிருக்கிறார்.
இப்படி இருவரும் அவரவருடைய தனி பாதையில் பயணிக்கும் பொழுது அவர்களை இணைத்து வைத்து பேசுவது எந்த விதத்திலும் சரியல்ல என கூறி பலரும் இவ்வாறு கிசுகிசுக்களை பரப்ப வேண்டாம் என தங்களுடைய விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்.