இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) வெளிநாட்டு கிரிக்கெட் தொடர்களில் வீரர்களின் குடும்பத்தினர் அவர்களுடன் தங்குவதற்கு சில புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. 45 நாட்கள் அல்லது அதற்கு மேற்பட்ட கால அவகாசம் கொண்ட தொடர்களில், குடும்பத்தினர் 14 நாட்கள் மட்டுமே வீரர்களுடன் தங்க அனுமதிக்கப்படுவார்கள். குறுகிய கால தொடர்களில், இந்த வரம்பு 7 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விதி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா 1-3 என்ற கணக்கில் தோல்வியடைந்த பிறகு கொண்டுவரப்பட்டது.
இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, BCCI-ன் இந்த புதிய விதி குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். “வெளியே தீவிரமான சூழ்நிலைகள் இருக்கும்போது, குடும்பத்தினருடன் திரும்பி வருவது எவ்வளவு ஆறுதலானது என்பதை மக்களுக்கு விளக்குவது மிகவும் கடினம். அது எவ்வளவு முக்கியம் என்பதை மக்கள் புரிந்துகொள்வதில்லை என்று நினைக்கிறேன். இது எனக்கு ஏமாற்றமளிக்கிறது, ஏனென்றால், நடப்பதைக் கட்டுப்படுத்த முடியாதவர்கள், ‘ஒருவேளை அவர்களை விலக்கி வைக்க வேண்டும்’ என்பது போன்ற பேச்சுக்களில் இழுக்கப்படுகிறார்கள்” என்று கோலி கூறியிருந்தார்.
விராட் கோலியின் இந்த விமர்சனத்திற்குப் பிறகு, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான கவுதம் கம்பீர் BCCI-ன் புதிய விதிக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். செதேஷ்வர் புஜாராவுடனான ஒரு சிறப்பு நேர்காணலில், கம்பீர்
“குடும்பங்கள் முக்கியம், ஆனால் நீங்கள் ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். நீங்கள் இங்கே ஒரு நோக்கத்திற்காக இருக்கிறீர்கள். இது ஒரு விடுமுறை அல்ல.
நீங்கள் ஒரு பெரிய நோக்கத்திற்காக இங்கே இருக்கிறீர்கள். நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வாய்ப்பு இந்த டிரஸ்ஸிங் ரூம் அல்லது இந்த சுற்றுப்பயணத்தில் மிகச் சிலருக்கே கிடைக்கிறது. அதனால், குடும்பத்தினர் எங்களுடன் இருக்கக்கூடாது என்பதற்கு நான் எதிரானவன் அல்ல. மேலும் அவர், “குடும்பங்கள் இருப்பது முக்கியம், ஆனால் உங்கள் கவனம் நமது நாட்டிற்கு பெருமை சேர்ப்பதில்தான் இருக்க வேண்டும்.