Thiruvallur: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள ஆர்.கே பேட்டையில் நடந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் பிரமுகர் ராஜேந்திரன் என்பவரை கஞ்சா போதையில் ஹரிகிருஷ்ணன் என்பவர் கொலை செய்துள்ளார். இதனை அடுத்து திருத்தணி காவல் நிலைய போலீசார் ஹரி கிருஷ்ணனை கைது செய்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் அம்மையார் குப்பம் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் அந்தப் பகுதி காங்கிரஸ் நகர துணை த் தலைவராக இருந்து வந்துள்ளார் மற்றும் அவர் ஒரு நெசவுத்தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு ராஜேந்திரன் மர்ம நபர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
அவர் வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது இயற்கை உபாதை கழிக்க வெளியே செல்லும் பொழுது மர்ம நபர்களால் அவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் அவர் மனைவி அவர் காணவில்லை என்று சுமார் 12 மணி அளவில் தேடிப்பார்த்த பொழுது அவர் எங்கேயும் இல்லாத காரணத்தால் வீட்டுக்கு போய் தூங்கிவிட்டார் என்று நினைத்துக் கொண்டு அவன் மனைவி வேலையை செய்து கொண்டிருந்தார்.
மேலும் மாலை அவர் வீட்டில் இல்லாத காரணத்தினால் தேடிப் பார்த்த பொழுது வீட்டின் பின்புறத்தில் சடலமாக கிடந்துள்ளார். மேலும் இவருக்கு மூன்று ஆண் பிள்ளைகள் உள்ளனர் இவர்களின் இரண்டு மகன்களும் சென்னையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகின்றனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆர் கே பேட்டை காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும் இச்சம்பவம் மீது வழக்குப்பதிவு தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர் .டி எஸ் பி காந்தன் தலைமையில் தீவிர தேடுதல் பணி மேற்கொண்டு வந்துள்ளனர். மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வைத்து சோதனை மேல் கண்ட பொழுது ராஜேந்திரனை கொன்றதாக ஹரி கிருஷ்ணன் என்பவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இதற்கு என்ன காரணம் என்ன என்று காவல்துறையினர் விசாரித்த பொழுது ராஜேந்திரன் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியின் அருகே கஞ்சா வித்து கொண்டிருப்பதை தட்டி கேட்டதாகவும் அவர்களை கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த ஹரி கிருஷ்ணன் என்பவர் ராஜேந்திரனை அவர் வீட்டின் அருகே வைத்து கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. மேலும் ஹரி கிருஷ்ணனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இச்சம்பவம் திருத்தணியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.