சமீப காலமாகவே கேஸ் சிலிண்டர்களின் விலையானது மாத முதலில் அந்த மாதத்திற்கான பெட்ரோல் டீசல் மற்றும் எண்ணெய் விலையை பொறுத்து மாற்றம் அடைந்து வருகிறது. தற்சமயம் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர்களுக்கு எந்த ஒரு மாற்றமும் இல்லை. பழைய விலை படியே தொடரும் என்று வெளியிடப்பட்டுள்ளது. அதாவது வீட்டு உபயோகத்திற்கான ஒரு கேஸ் சிலிண்டரின் விலை ரூபாய் 868.50 என்று வசூலிக்கப்படுகிறது. இதன் வணிக பயன்பாட்டிற்கான விலையானது கச்சா எண்ணெய் வரத்தை பொறுத்து இந்த மாதம் குறைந்துள்ளது.
வணிக பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்படும் பெரிய கேஸ் சிலிண்டர்களின் விலையானது அதன் மதிப்பில் இருந்து 58 ரூபாய் குறைந்து விற்கப்படும் என்று தகவல் வெளியிட்டுள்ளது. இது கச்சா எண்ணெய் டீசல் பெட்ரோல் ஆகியவற்றின் வரத்தை பொறுத்து இந்த மாதம் குறைந்துள்ளது என்று பொது எண்ணெய் வளாகத்துறை வெளியிட்டுள்ளது. இதுவரை வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டரின் விலை ₹ 1881 ஆக இருந்தது. இந்த மாதத்திற்கான வணிக கேஸ் சிலிண்டரின் விலை 58 ரூபாய் குறைந்து ரூபாய் 1822 ஆக விற்கப்பட உள்ளது. இதனால் வணிக பயன்பாட்டாளர்கள் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளார்கள். மேலும் வீட்டு உபயோக சிலிண்டரின் விலையிலும் ஏதேனும் மாற்றம் ஏற்பட உள்ளதா என்று மக்கள் பயந்த நிலையில் அது இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வீட்டு உபயோக சிலிண்டர் ஆனது 14.5 கிலோ மற்றும் வணிகத்திற்கான பயன்படுத்தப்படும் சிலிண்டர் ஆனது 19 கிலோ என்பதால் இந்த வேறுபாடு காணப்படுகிறது.