ஒரு காலகட்டத்திற்கு பின்னர் சினமாவில் தாய் பாசம் தங்கை பாசம் போன்ற சென்டிமென்டல் காட்சிகள் தவிர்க்கப்பட்ட ஹீரோக்களுக்காக கதை எடுக்கப்பட்டதாகவும் அந்த கதைகள் ஈஸி கோயிங் ஆக இருந்தனர் என்றும் பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார் மூத்த அரசியல் விமர்சகர் டாக்டர் காந்தராஜ்.
பாலும் பழமும் திரைப்படம் எடுக்கப்பட்ட சூழ்நிலை குறித்தும் அதன் பின்பு ஜெய்சங்கர் ஜெயலலிதா இருவரும் இணைந்த கொடுத்த நீ யார் நீ போன்ற ஹிட் திரைப்படங்கள் குறித்தும் மனம் திறந்து இருக்கிறார் மூத்த அரசியல் விமர்சகர். அண்ணே என்ற வார்த்தையை மாற்றி நட்பாக பழகக்கூடிய சூழலையும் ஹாய் என்ற வார்த்தையையும் அறிமுகப்படுத்தியவர் ஜெய்சங்கர் என புகழாரம் சுட்டியிருக்கிறார்.
உண்மையிலேயே வாரிவள்ளல் என்று கூற வேண்டும் என்றால் சினிமா துறையில் இவரைத்தான் கூற வேண்டும் என்றும் மற்றவர் எல்லாம் யாருக்காவது உதவிகள் செய்கிறார்கள் என்றால் அந்த உதவிகளை பத்து பேர் முன்னிலையில் தான்தான் செய்தேன் என்பதை காட்டி செய்யக்கூடியவர்கள் என்றும் ஆனால் ஜெய்சங்கர் அப்படி இல்லை அதற்கு மாறாக யாராவது தயாரிப்பாளர்கள் பண பற்றாக்குறையால் படம் எடுக்க தவித்துக் கொண்டிருந்தால் அழைத்து பணம் கொடுத்து படத்தை நல்லபடியாக முடிக்கும் படி சொல்லி அனுப்புவாராம்.
படம் நன்றாக ஓடி லாபம் ஈட்டினால் மட்டுமே அந்த பணத்தை திருப்பி தரலாம் என்றும் இல்லை என்றால் அந்த தேவை கூட இல்லை என்றும் சொல்லி அனுப்புவாராம். ஒரு காலகட்டத்தில் ஜெமினி சாவித்திரிக்கு அடுத்த ஜோடியாக ஜெய் ஜோடி அனைவரின் உடைய கண்களையும் உறுத்திய ஜோடியாக அமைந்திருக்கிறது.
ஜெயலலிதா மற்றும் ஜெய்சங்கர் ஜோடி காதல் வலையில் இருப்பதாகவும் அவர்களுக்கிடையில் இருக்கக்கூடிய உறவு குறித்தும் அப்போதைய பத்திரிகைகளில் எழுதாத நாட்கள் இல்லை என்றும் ஜெயலலிதாவை அம்மு என்று அவருடைய அம்மா மட்டுமே அழைப்பார் என்றும் அவரை தொடர்ந்து ஒரு சில நெருங்கிய வட்டாரங்களில் உள்ளவர்கள் மட்டுமே அப்படி அழைக்கக்கூடிய சூழலில் ஜெய்சங்கரும் ஜெயலலிதாவை அம்மு என்று அழைத்ததால் தான் இவ்வளவு பிரச்சனைகளும் இருந்தது என விளக்கி இருக்கிறார் மூத்த அரசியல் விமர்சகர்.