புதுச்சேரி முழுவதும் ஜூலை 9ஆம் தேதி பொது வேலை நிறுத்தம் !! 

General strike across Puducherry
புதுச்சேரி: மத்திய தொழிற்சங்கங்கள் நாடு முழுவதும் பொது வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளது. இந்தப் போராட்டத்தை புதுச்சேரியில் நடத்துவதாக ஆலோசனை கூட்டம் ஏ ஐ டி யு சி அலுவலகத்தில் நடந்தது. புதிய தொழிலாளர் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் திட்டம் சார்ந்து தொழிலாளர்கள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் குறைந்தபட்ச ஊதியம் ஆனது 26000  நிர்ணயம் செய்ய வேண்டும்.
ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்றும், பொது வேலை நிறுத்தம் அழைப்பிற்கு ஜூலை 9ஆம் தேதி பந்த் அறிவிக்கப்பட்டது. மேலும், அமைப்பு சாரா தொழிலாளர் ஒப்படை அனைத்து தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ 9000 அளிக்க வேண்டும் என்று வலியுறுத்த உள்ளனர். சமூக பாதுகாப்பு உறுதி செய்ய மற்றும் பழைய ஓய்வூதிய திட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
மேலும், போனஸ், வருங்கால வைப்பு நிதி மற்றும் பணிக்கொடை ஆகியவற்றை உச்சவரம்பை நீக்க வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த, உணவு, வேளாண் இடுபொருள்கள் , மருந்து போன்றவற்றிற்கு மீதான ஜிஎஸ்டி ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்த உள்ளது. பெட்ரோலிய பொருட்கள் மற்றும் சமையல் எரிவாயு மீதான கலால் வரியை குறைத்து உணவு பாதுகாப்பு உத்தரவாதப்படுத்த வேண்டும் என்று வினையாக திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தண்ணீர் கல்வி மருத்துவம் அனைவருக்கும் கிடைக்க உரிமையாக்க வேண்டும் என்று உள்ளிட்ட 21 கோரிக்கைகளை முன்வைத்து ஜூலை 9ஆம் தேதி பொது வேலை போராட்டம் நடத்துவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக ஜூன் 23, 24, 25 ஆம் தேதிகளில் நிறுவனங்களுக்கு ஆதரவு கேட்டு கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. ஜூன் 30 மட்டும் ஜூலை ஒன்றாம் தேதியில் தெருமுனைப் பிரச்சாரங்களில் ஈடுபட்டனர்.
ஜூலை 3, 4, 5 தேதிகளில் வேலை நிறுத்த பந்த் போராட்டத்தை விளக்கி வாகனங்களில் புதுச்சேரி முழுவதும் பிரச்சாரம் நடத்துவது குறித்து முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஏஐடியுசி மாநில பொதுச் செயலாளர் சேதுசெல்வம் தலைமை தாங்குகிறார். மாநில கவுரவ தலைவர் அபிஷேகம், சிஐடியு, எல்பிஎஃப், ஏஐசிசிடியு, மாநில தலைவர் தினேஷ் பொன்னையா, நிர்வாகிகள் மற்றும் தொழிற்சங்க தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram