ஆர் ஆர் பி ஜெனரல் டிக்கெட் எடுத்து ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மார்ச் மாதத்தில் சில இயக்கப்பட்டு வருகின்ற ரயில் நேரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது ஆர்ஆர்பி. இனிமேல் மக்கள் பொது டிக்கெட் ஒன்றை எடுத்து அதன் மூலம் வெவ்வேறு ரயில்களில் பயணம் செய்வதை நிறுத்த புதிய வழிமுறைகளை கையாளத் திட்டமிட்டுள்ளது.
அதன்படி பொதுவாக எடுக்கப்படும் ஜென்ரல் டிக்கெட்களில் அவர்கள் பயணம் செய்யப்போகும் ரயிலுக்கான பெயர் அதில் இடம் பெற்றிருக்கும். இதன் மூலம் பயணிகள் டிக்கெட் எடுக்கும் ரயில்களில் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். மேலும் இதன் மூலம் அந்த ரயிலில் பயணம் செய்யும் நபர்களின் எண்ணிக்கை குறைக்கப்படும். கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி சில நபர்கள் உயிரிழந்ததற்கு பின் இவ்வாறு நடைமுறை மாற்றப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் பொது டிக்கெட்டின் நேர அவகாசம் 3 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது. அதற்கு மேல் அந்தப் பயணச்சீட்டு செல்லுபடி ஆகாது என்று தகவலை பகிர்ந்துள்ளது.
இந்த குறிப்பிட்ட கால இடைவெளியில் அந்தப் பயணச்சீட்டு உபயோகிக்கப்படவில்லை என்றால் அது செல்லுபடி ஆகாது. இதன் மூலம் குறிப்பிட்ட நேரத்தில் பயணம் செய்யும் பயனர்களின் எண்ணிக்கை பொறுத்து கூட்டத்தை கட்டுப்படுத்த அதிகாரிகளுக்கு இது பெரிதளவும் பயன்படும். மேலும் இதன் மூலம் பயனர்களும் எந்த ரயிலில் ஏற வேண்டுமா அதற்குரிய டிக்கெட்டை மட்டும் எடுத்து பயணம் செய்வார்கள் என்று குறிப்பிட்டுள்ளது. இனிமேல் ஒரு டிக்கெட் எடுத்துக்கொண்டு, அதன் மூலம் வெவ்வேறு ட்ரெயின்களில் பயணம் செய்ய முடியாது.