இந்த காலத்தில் குழந்தை வளர்ப்பு என்பது மிக முக்கிய குவாலிட்டியாக கருதப்படுகிறது. அதுவும் இந்த காலத்தில் பெண்களும் வேலை செய்து கொண்டே குழந்தைகளை வளர்த்து நல்ல பழக்கவழக்கங்களை எடுத்துரைத்து கூறுவது மிக சவாலான ஒன்றுதான். சிலருக்கு தாத்தா பாட்டி துணை இருக்கிறார்கள். ஆனால் பெரும்பாலான குடும்பத்தில் குழந்தைகள் தனியே வளர்க்க வேண்டிய கட்டாய சூழ்நிலையும் நிலவுகின்றது. அவரவர் குடும்பங்களை அவரவர் பார்த்துக் கொள்ளுங்கள் என்று இருந்து விடுகிறார்கள்.
சச்சின் பட நடிகை ஜெனிலியா தனது கணவரோடும் தனது குழந்தைகளோடும் இருக்கும் புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. அவரது சமீபத்திய அப்டேட்ஸ்களில் ஒரு செய்தி மிக பேமஸ் ஆனது. புகைப்படங்கள் குறித்து நவீன குழந்தைகளுக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. மேலும் அவர்களது பெற்றோர்களும் அதை எங்கரேஜ் செய்து சமூக வலைதளங்களில் அப்லோட் செய்து வருகின்றனர். நடிகை என்றால் சும்மாவா! அவர் செல்லும் இடமெல்லாம் அவர்களை போட்டோ எடுத்து நெட்டிசன்கள் அப்லோட் செய்கின்றனர். இது குறித்து ஜெனிலியா விடம் அவரது மகன், எங்கம்மா நம்ம எங்கே போனாலும் நம்ம எல்லாம் போட்டோ எடுத்துட்டு இருக்காங்க! என்று கேட்க, ஜெனிலியா சிறிதும் பகட்டு தன்மை காட்டாது தன் குழந்தைகளுக்கு நீ வாழ்வில் உன் கெரியரில் இன்னும் உச்சம் அடையவில்லை. அப்படியும் உன்னை போட்டோ எடுக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு நீ நன்றி சொல்ல வேண்டும் என்று மரியாதை தனத்தை பக்குவமாக எடுத்துக் கூறியுள்ளார். உண்மையிலேயே இது ஒரு நல்ல உதாரணம் என்று பலரும் இந்த செய்தி குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.