கோவை: கோவையில் உள்ள வடவள்ளி சேர்ந்த பெண்ணும், திருப்பூர் அவிநாசி பாளையத்தைச் சேர்ந்த ஒரு வாலிபரும் நடுரோட்டில் சண்டையிட்டுக் கொண்ட சம்பவம் தற்போது இணையதளங்களில் பரவலாகி வருகிறது. இருவரும் காதலித்து வந்த நிலையில் கல்யாணம் செய்து கொள்ளவும் முடிவு செய்து 9 மாதங்களாக கோவையில் வாடகை வீடு எடுத்து திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வசித்து வந்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக இருவருக்கும் சண்டை தகராறு என பெரிதாகிக் கொண்டு வந்துள்ளது. ஒரு கட்டத்தில் அந்த வாலிபர் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என கூறிய நிலையில் அவரை துரத்திக் கொண்டு வந்ததாக அந்தப் பெண் போலீசில் கூறியுள்ளார். உடனே காதலிடம் கேட்டபோது திருமணம் செய்ய தன்னுடைய பெற்றோரிடம் பேசி தான் முடிவு எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதை அருகில் இருந்து கேட்டுக் கொண்டிருந்த அந்தப் பெண் 9 மாதமாக கல்யாணம் செய்யாமல் குடும்பம் நடத்திய போது நன்றாக இருந்ததா என்று கேட்டு முகத்தில் தாக்கி உள்ளார்.
பிறகு அந்த இருவரையும் காவல்துறை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று இரு குடும்பத்தில் இருக்கும் தகவல் கொடுத்து இரண்டு பேரையும் பெற்றோரிடம் ஒப்படைத்தனர் மேலும் இது தொடர்பாக எந்த வழக்கும் பதிவு செய்யாமல் புகார் இருவரும் கொடுக்காத நிலையில் பேசி பெற்றோரிடம் ஒப்படைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.