சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை ஏப்ரல் 22 ஆம் தேதி ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.74,320 க்கு விற்பனை செய்து புதிய உச்சத்தை தொட்டது. சில நாட்களாகவே ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த மே 21, 22 தேதிகளில் விலை அதிகரித்து விற்பனை செய்யப்பட்டது. மேலும், மே 23, 26 தேதிகளில் குறைந்து விற்பனை செய்யப்பட்டது. மீண்டும் மே 24, 25 தேதிகளில் அதிகரித்து விற்பனையானது. இதனை தொடர்ந்து நேற்று (மே 27) மீண்டும் அதிகரித்து விற்பனை செய்யப்பட்டது. நேற்று முன் தினம் (மே 26) ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 8,950 விற்பனையானது.
ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 71,600 க்கு விற்பனையானது. நேற்று (மே 27) மாலை நேர விலை நிலவரப்படி ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 45 ம் , ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ. 360 ம் அதிகரித்து விற்பனையானது. அதன்படி ஒரு கிராம் ரூ. 8,995 க்கு விற்பனையானது.மேலும் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ. 71,960 க்கு விற்பனை செய்யப்பட்டது.
சென்னையில் இன்று (புதன்கிழமை)
கிராமுக்கு ரூ. 60 குறைந்து,ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.8,935 க்கும், பவுனுக்கு ரூ.480 குறைந்து ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ. 71,480 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.வெள்ளி விலையில் மாற்றம் எதுவும் இல்லாமல் ஒரு கிராம் ரூ. 111 க்கும், ஒரு கிலோ ரூ. 1,11,000 க்கும் விற்பனையாகிறது.





