தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கம் விலை, இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது.
சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக, ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,280 குறைந்து நகை வாங்குவோருக்குப் பெரும் ஆறுதலை அளித்துள்ளது. இதன்படி, சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.14,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றைய விலையில் இருந்து சரிந்து, இன்று ரூ.1,19,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில வாரங்களாக ஒரு சவரன் தங்கம் ரூ.1.20 லட்சத்தைத் தாண்டி விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று இந்த விலை சரிவு ஏற்பட்டுள்ளது. திருமண சீசன் தொடங்கி உள்ள நிலையில், இந்தத் திடீர் விலை குறைவு நகைக்கடைகளில் மக்கள் கூட்டத்தை அதிகரிக்கச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் வெள்ளியின் விலையிலும் சிறிய அளவிலான மாற்றங்கள் காணப்படுகின்றன.


